தூத்துக்குடி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் லூசியா பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரபோஸ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் முன்னிலையில் மாவட்ட பிரபு மன்றத் தலைவர் குமார முருகேசன் சின்னகாளை, ரெனிஷ், சதீஷ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காலை உணவு வழங்கிய தூத்துக்குடி காங்கிரஸ் கட்சியினருக்கு லூசியா பள்ளி மாணவர்களும், நிர்வாகிகளும் நன்றியையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

