சென்னை பெருநகர காவல் அடையாறு மாவட்டம் சைதாப்பேட்டை
காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக புகழேந்தி
அவர்கள் பணிபுரிந்து வருகிறார். சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற
குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை தேடி ரோந்து சென்று கொண்டு இருந்த
போது 13ம்தேதி அதிகாலை சுமார் 02.30 மணிக்கு பனகல் மாளிகை
பகுதிவழியாக செல்லும் அடையாற்றின் பாலத்தின் கீழ் ஏதோ உருவம்
அசைவதாக தெரிய வர அருகில் சென்று பார்த்த போது சுமார் 55 வயது
மதிக்கதக்க பெண்மணி ஒருவர் ஆற்றின் சகதியில் சிக்கி கொண்டு உயிருக்கு
போராடி கொண்டிருந்தது தெரிய வந்தது. அவரின் உடல் முழுவதுமாக சகதியில்
மாட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்ததை
கண்ட அவர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். யார் சென்றாலும்
சகதியில் மாட்கொள்வோம் என்ற நிலையில் ஆய்வாளர் புகழேந்தி அருகில்
இருந்த ஆஸ்பெட்டாஸ் ஓடு மற்றும் மரக்கட்டைகளை ஆற்றில் எட்டும் தொலைவு
வரை போட்டு தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அதன் மீது நடந்து சென்று
ஆற்றில் இறங்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அப்பெண்மணியை மீட்டூள்ளார்.
பின் அப்பெண்ணை விசாரணை செய்ததில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்
என்பதும் அவர் தன்னிலை தெரியாமல் நடந்து வந்ததில் ஆற்றில்
மாட்டிக்கொண்டதும் தெரிய வந்தது. பின்னர் அருகில் உள்ள காவல்
நிலையங்களுக்கு தகவல் அளித்து விசாரணை செய்ததில் கிண்டியில் உள்ள
நாகி ரெட்டியாபட்டி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் என்று தெரிய வர அவரின்
மகன் ஆனந்தன் என்பவருக்கு தகவல் தெரிவித்து நல்லமுறையில் அவரின்
குடும்பத்தாரிடம் அப்பெண்மணி ஒப்படைக்கப்பட்டார். தன்னுடைய தாயை
நல்லமுறையில் மீட்டு கொடுத்த காவல்துறையினருக்கு அப்பெண்மணியின்
குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். தாமாக முன் வந்து உயிருக்கு
போராடிக்கொண்டிருந்த பெண்ணை மீட்டமை குறித்து தெரிய வர அடையாறு
மாவட்டம் துணை கமிஷ்னர் விக்ரமன் காவல்
ஆய்வாளர் புகழேந்தியை வெகுவாக பாராட்டினார்.

மேலும் நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல் தானாக முன் வந்து தன்
உயிரையும் துச்சமாக மதித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்மணியை
சமயோஜிதமாக செயல்பட்டு மீட்டதற்கு போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் காவல்
ஆய்வாளரை வெகுவாக பாராட்டினார்.

