• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தருவைகுளம் சாலையில் குழாய் பாலம் அமைக்கும் பணியினை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பார்வையிட்டார்

policeseithitv by policeseithitv
December 8, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தருவைகுளம் சாலையில் குழாய் பாலம் அமைக்கும் பணியினை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பார்வையிட்டார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட தருவைகுளம் சாலை கி.மீ 1/8 உள்ள குழாய் பாலம் அமைக்கும் பணியினை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் நேரில் பார்வையிட்டார்.

முன்னதாக, மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட தருவைகுளம் சாலையில் குழாய் பாலம் அமைக்கும் பணியினை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து தரக் கோரி மாப்பிள்ளையூரணி ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் ஆறுமுகநயினாருக்கு 18.01.2023 அன்று கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்திருந்தார்.

அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியிருந்ததாவது: தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட தருவைகுளம் சாலை கி.மீ 1/8 உள்ள குழாய் பாலம் பணிகள் 15.01.2023ல் முடிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாளது தேதி வரை பணிகள் நிறைவு பெறவில்லை.

மேற்படி பணியானது மாப்பிள்ளையூரணி பொதுமக்களின் 3 வருட கோரிக்கையாகும். மேலும் இவ்விடத்தில் பல சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதுபோன்று மீண்டும் சாலை விபத்துக்கள் ஏற்படின் அதற்கு முழுபொறுப்பு நெடுஞ்சாலை துறையையே சாரும் என்ற விபரத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இப்பொருள் தொடர்பாக வரும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கேள்வி எழுப்பப்படவுள்ளதால் தூத்துக்குடி தருவைகுளம் சாலை கி.மீ. 1ஃ8 உள்ள குழாய் பாலம் அமைக்கும் பணி மீது தனிக்கவனம் செலுத்தி இப்பணியினை விரைந்து முடிக்கும்படி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், மாப்பிள்ளையூரணி ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் ஆறுமுகநயினாருக்கு அனுப்பிய கோரிக்கை கடிதத்தை ஏற்று, தருவைகுளம் சாலை கி.மீ 1/8 உள்ள குழாய் பாலம் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் நேரில் பார்வையிட்டு, பணிகளை நல்ல முறையில் செய்ய வேண்டுமென்று ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுக் கொண்டார்.

இதில், தெற்கு மாவட்ட திமுக சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஒன்றிய திமுக துணை செயலாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜெயசீலன், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Previous Post

செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில்  பேராசிரியர்களுக்கு சிறப்பு தொழில் நுட்ப பயிற்சி! 

Next Post

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

Next Post
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In