• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுபடி சென்னையில் களமிறங்கி நிவாரண பணிகளை மேற்கொள்ளும் அமைச்சர் கீதாஜீவன்!!! 

policeseithitv by policeseithitv
December 8, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுபடி சென்னையில் களமிறங்கி நிவாரண பணிகளை மேற்கொள்ளும் அமைச்சர் கீதாஜீவன்!!! 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜாம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல்; தீவிர புயலாக வலுப்பெற்றது. இதன் காரணமாக சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மாநகரம் வரலாறு காணாத மழையை எதிர்கொள்ள நேரிட்டது.

இடைவிடாத மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 30 சதவீத பகுதிகள் மிக்ஜாம்; புயல் மழையால் மிக மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பள்ளிக்கரணை, வேளச்சேரி, பெரும்பாக்கம், தாம்பரம், முடிச்சூர், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையாறு, கோடம்பாக்கம், மாம்பலம் பகுதிகளில் அதிகபட்ச பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. அம்பத்தூர் பகுதிகளில் குறைந்தபட்ச பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் மிக மிக குறைவான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 97 சதவீத பகுதிகள் மிக்ஜாம்; புயல் மழையால் பாதிப்பை சந்தித்து உள்ளன.

இதனிடையே, சென்னையில் கொட்டித் தீர்த்த மழைக்கு 7 பேர் உயிரிழந்தனர். மழைநீர்; தேங்கிய தாழ்வான பகுதிகள், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 10 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்கள், நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வரலாறு காணாத மழையால் மாநகரமே வெள்ளக்காடானது. சாலைகளெங்கும் வெள்ளநீர் தேங்கியதால் பல சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பிற மாவட்டங்களில் இருந்து 5000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீட்பு பணிகளுக்காக சென்னைக்கு வந்துள்ளனர்.

கோரத்தாண்டவம் ஆடிய மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலினிடம் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தனர்.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை சரிசெய்யவும், நிவாரண உதவிகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு ரூ.5060 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் வழங்கினார்.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். அப்போது, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆய்வுக்குப் பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது புயல் வெள்ள பாதிப்பு விவரங்கள் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் முதலமைச்சர் எடுத்துரைத்தார். அதன்பின்னர் மத்திய அமைச்சருக்கு புயல் பாதிப்பு குறித்தும், நிவாரணப் பணிகள் குறித்தும் வீடியோ காட்சி மூலம் விளக்கமளிக்கப்பட்டது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், சென்னை மீண்டு வர தேவையான அனைத்து நிவாரண உதவிகளும் விரைந்து வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோருக்கு உத்தரவிட்டதையடுத்து எல்லா பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் இணைந்து வெள்ள நீரை வெளியெற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுபடி, சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நீலாங்கரை பகுதியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெள்ளத்தால் பகுதிகளை பார்வையிட்டார். தூத்துக்குடியில் இருந்து லாரி மூலம் கொண்டு சென்ற நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி, அங்கேயே முகாமிட்டு மழைநீர் வெளியேற்றும் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.

இதில், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Previous Post

அரசு டாஸ்மாக் கடையை அகற்றிவிடுவதாக பணம் கேட்டு மிரட்டி வரும் ச.ம.க நிர்வாகி மீது தூத்துக்குடி கலெக்டரிடம் பரபரப்பு புகார்

Next Post

செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில்  பேராசிரியர்களுக்கு சிறப்பு தொழில் நுட்ப பயிற்சி! 

Next Post
செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில்   பேராசிரியர்களுக்கு சிறப்பு தொழில் நுட்ப பயிற்சி! 

செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில்  பேராசிரியர்களுக்கு சிறப்பு தொழில் நுட்ப பயிற்சி! 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In