தூத்துக்குடி
தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் திட்டத்தின் கீழ் தங்கம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 50 மாணவ, மாணவியர்களுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்துகொண்டு சைக்கிள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் பள்ளி தாளாளர் ஜீவன்ஜேக்கப், தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், பெரியசாமி அறக்கட்டளை நிர்வாகிகள் சுதாசுதன், டாக்டர் மகிழ்ஜான் சந்தோஷ், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் மணி, அல்பட், ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

