தூத்துக்குடி
திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மற்றும் மேம்பாட்டுத் துறை சிறப்பு திட்ட செயலாளக்க துறை அமைச்சருமான உதயநிதிஸ்;டாலின் பிறந்தநாளை முன்னிட்டு எளியோர் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதையொட்டி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி
தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி சவேரியார்புரத்திலுள்ள முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு தெற்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளரும் மாவட்ட கவுன்சிலருமான அருண்குமார் தலைமையில் உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணை அமைப்பாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினருமான தங்கமாரிமுத்து, மாவட்;ட துணை அமைப்பாளர்கள் பிரசாத், காட்வின்ராஜா, பிரவீன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உணவு வழங்கப்பட்டதையொட்டி முதியோர் இல்லத்தில் உள்ளவர்களும் காப்பாளர்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

