மாப்பிள்ளையூரணி பகுதியில் சேதம் அடைந்த சாலைகளை சண்முகையா எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்
தூத்துக்குடி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் மழையினால் பாதிக்கப்பட்டு சேதம் அடைந்த தாளமுத்துநகர் பிரதான சாலை ராயல் கல்யாண மண்டப சாலை தாளமுத்துநகர் – சவேரியார்புரம் சாலை ஆகிய சாலைகளை சண்முகையா எம்.எல்.ஏ பார்வையிட்டு அப்பகுதி வியாபாரிகள் பொதுமக்கள் படும் பாதிப்புகளை போக்கும் வகையில் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டார். அதிகாரிகள் விரைந்து சரிசெய்ய துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
ஆய்வின் போது தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், கூட்டுறவு கடன்சங்க தலைவரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார,; தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான தங்கமாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஓன்றிய செயலாளர் சங்கரன், மற்றும் கொம்பையா, ஜெகதீசன் உள்பட உடன் இருந்தனர்.

