தூத்துக்குடி
தமிழ்நாட்டின் மாநில உரிமை மீட்புக்காக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் வருகின்ற டிசம்பர் 17ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முக்கியத்துவமிக்க மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இரு சக்கர வாகனங்களைக் கொண்ட வாகனப் பேரணியை கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை எதிரே திமுகவின் இளைஞர் அணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 15ம் தேதி தொடங்கி வைத்தார். ஓவ்வொரு பகுதியாக செல்லும் வாகனங்கள் பொதுமக்களிடம் நீட் விலக்கு அது நமது விலக்கு என்ற அடிப்படையில் நீட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கமும் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த வாகனப் பேரணியை மேயர் ஜெகன் பெரியசாமி வரவேற்றார்.
வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர்கள் பிரதீப், மகேந்திரன், ராதா கிருஷ்ணன், பாரதி, ஜோசப் அமல்ராஜ், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் பால்துரை, பாலமுருகன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர்கள் சங்கரநாராயணன், சிவக்குமார் என்ற செல்வின், ரவி, முகம்மது ஜெயலாப்தீன், பிரவீன்குமார், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜன் பாபு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கோகுல்நாத், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி, மாப்பிள்ளையூரணி பாரி, உள்பட பலர் உடனிருந்தனர். இப்பேரணி வரும் 29ம் தேதி சேலம் சென்றடைகிறது.

