தூத்துக்குடி
கடந்த சில நாட்களாக பெய்த கன மழையினால் தூத்துக்குடி மாநகராட்சியின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தேங்கிய மழை நீரை உடனே அப்புறப்படுத்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி எஸ்.கே.எஸ்.ஆர் காலனி, சக்தி விநாயகர்புரம், எழில் நகர் பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறுகையில், “இப்பகுதிகளானது கடந்த பல ஆண்டுகளாக மழை வெள்ளத்தினால் மிகவும் பாதிப்படைந்த ஒரு பகுதியாகும் தற்பொழுது புதிய வடிகால் பணிகள் தார் சாலைகள் அமைத்த பின்பு இப்போது பெய்த மழையில் அந்த பகுதியில் நீர் தேங்கவில்லை. மேலும் வரும் காலங்களிலும் நீர் தேங்காது என்று மேயர் தெரிவித்தார்.

