தூத்துக்குடி,
நவ,15
தூத்துக்குடி முன்னாள் நகர்மன்ற தலைவரும் வல்லநாட்டிலிருந்து தூத்துக்குடி மாநகருக்கு குடிதண்ணீர் கொண்டு வந்த குரூஸ்பர்னாந்து 154வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதுபோல் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.பி மாரியப்பன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர்
தூத்துக்குடி எம்.ஜி.ஆர் பூங்காவில் அமைந்துள்ள குரூஸ்பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு மாவட்டச் செயலாளர் எஸ் பி மாரியப்பன் இனிப்புகள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் மில்லை தேவராஜ், சண்முகபுரம் செல்வகுமார், அண்ணா நகர் முத்துராஜ், நட்டாத்தி அலாட் குமார்,, காமராஜர் நகர் கதிர்,முருகன் ஸ்டோர் முருகன், உட்பட பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஏராளமானோர் கலந்துகொண்டு மரியாதை செய்தனர்.

