தூத்துக்குடி.
திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கையில், தூத்துக்குடியில் முன்னாள் நகர்மன்ற தலைவர் குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி, தூத்துக்குடி எம்.ஜி.ஆர் பூங்கா அருகில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 77.87லட்சம் செலவில் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து-க்கு குவி மாடத்துடன் கூடிய திருவுருவ சிலை அமைக்கப்பட்டது. அதனை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலி காட்சியின் மூலம் திறந்து வைத்தார். அப்போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், இயக்குநர் மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதனையடுத்து தூத்துக்குடி எம்.ஜி.ஆர் பூங்காவில் அமைந்துள்ள குரூஸ்பர்னாந்து சிலைக்கு கனிமொழி எம்.பி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மீனவர் நலன் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்எல்ஏ , மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் லட்சுமிபதி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் உள்பட பல்வேறு அரசியல்கட்சி பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள் மாலை அணிவித்தனர்.

முன்னதாக, தூத்துக்குடி முன்னாள் நகர்மன்ற தலைவரும் வல்லநாட்டிலிருந்து தூத்துக்குடி மாநகருக்கு குடிதண்ணீர் கொண்டு வந்த குரூஸ்பர்னாந்து 154வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பாராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் லட்சுமிபதி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மேலும், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிசங்கர், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொருளாளர் அனந்தையா, மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் அந்தோணிஸ்டாலின், மதியழகன், கவிதாதேவி, அன்பழகன், சீனிவாசன், குபேர் இளம்பரிதி, அபிராமிநாதன், அசோக், துணை அமைப்பாளர்கள் பிரதீப், ராதாகிருஷ்ணன், பெனில்டஸ், நிக்கோலாஸ் மணி, சாகுல்ஹமீது, கோகுல்நாத், நாகராஜன், ராமர், பிரபு, அந்தோணிகண்ணன், அருணாதேவி, பார்வதி, மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், சுரேஷ்குமார், ரவிந்திரன், ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், சேர்மபாண்டியன், செல்வகுமார், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், முருகஇசக்கி, ஜெயக்கனி, பரமசிவம், சீதாராமன், அருண்சுந்தர், டேனி, கிறிஸ்டோபர் விஜயராஜ், துணை அமைப்பாளர்கள் சங்கரநாராயணன், சிவக்குமார் என்ற செல்வின், ரவி, முகம்மது ஜெயலாப்தீன், பிரவீன்குமார், பால்ராஜ், குமரன், கருப்பசாமி, ராஜேந்திரன், ஆர்தர்மச்சாது, சீத்தாலெட்சுமி, தொழிற்சங்க மண்டல செயலாளர் முருகன், நிர்வாகிகள் மரியதாஸ், கருப்பசாமி, மாநகர இலக்கிய அணி தலைவர் சக்திவேல், துணை தலைவர் நலம் ராஜேந்திரன், அரசு வக்கீல்கள் மோகன்தாஸ் சாமுவேல், சுபேந்திரன், ஆனந்தகபேரியல்ராஜ், மாலாதேவி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சதீஷ்குமார், சுப்பையா, பாலகுருசாமி, பொன்னுச்சாமி, ராஜாமணி, கருப்பசாமி, சுரேஷ், கங்காராஜேஷ், டென்சிங், லியோ, ஜான்சன், சேகர், செல்வராஜ், பொன்ராஜ், முத்துராஜா, பத்மாவதி, பாலன், ரவிசந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் ரெங்கசாமி, சரவணக்குமார், விஜயகுமார், ஜெயசீலி, நாகேஸ்வரி, வைதேகி, தெய்வேந்திரன், கந்தசாமி, ஜான்சிராணி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், பவாணி மார்ஷல், முத்துவேல், சுயம்பு, சுப்புலட்சுமி, பொன்னப்பன், ராஜேந்திரன், ராஜதுரை, ரெக்ஸின், கண்ணன், விஜயலட்சுமி, சரண்யா, சுதா, பேபி ஏஞ்சலின், மரியகீதா, மகேஸ்வரி, ஜாக்குலின்ஜெயா, மும்தாஜ், முத்துமாரி, ராமுத்தம்மாள், எடின்டா, ரெக்ஸிலின், பாப்பாத்தி, ஜான், மாநகராட்சி உதவி ஆணையர் சேகர், முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, மகளிர் அணி ரேவதி, சத்யா, பெல்லா மற்றும் கருணா, மணி, பிரபாகர், ஜோஸ்பர், செந்தில்குமார், அல்பட், மகேஸ்வரசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அருணாச்சலம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மாடசாமி, செந்தூர்மணி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், துணை அமைப்பாளர்கள் அம்பாசங்கர், ஸ்டாலின், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன், சரவணக்குமார், இளையராஜா, பகுதி செயலாளர்கள் சிவகுமார், ஆஸ்கர், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, கலை இலக்கிய அணி அமைப்பாளர் துறைமுகம் ராமசாமி, இலக்கிய அணி அமைப்பாளர் ரகுராமன், ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சுரேஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்குமார், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் தயாநிதி பொன்இசக்கி, துணை அமைப்பாளர் சாரதா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ரெங்கசாமி, அந்தோணி தனுஸ்பாலன், திமுக மாநில மகளிர் பிரச்சார குழு செயலாளர் ஜெஸி பொன்ராணி, புன்னகாயல் ஊராட்சி மன்ற தலைவர் சோபியா, மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், சப்பாணிமுத்து, நாகராஜன், பூபேஸ்நாதன், வக்கீல்கள் பூங்குமார், கிருபாகரன், கபடிகந்தன், மதிமுக சார்பில் மகாராஜன், நக்கீரன், சரவண பெருமாள், மற்றும் பாத்திமா பாபு, வக்கீல் கயாஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், உதவி அலுவலர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குரூஸ் பர்னாந்து பேத்தி ரமோலா வாஸ் தமிழக முதலமைச்சருக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

