தூத்துக்குடி, நவ.13:
தூத்துக்குடி போல்பேட்டையில் அமைந்துள்ள ஜே.எம்.ஜே. விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி போல்பேட்டையில் ஜே.எம்.ஜே.செயற்கை புல்தரை விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கிரிகெட் பயிற்சி செய்வதற்கு தனித்தனி நெட் வசதியும், கால்பந்து மற்றும் பல விளையாட்டுகள் விளையாடுவதற்கும் வசதிகள் உள்ளன. மேலும், இங்கு சிறுவர்களுக்காக கிரிக்கெட் பயிற்சிகூடமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து விளையாட்டுகளை தொடங்கி வைத்தார்.

