தூத்துக்குடி.
தூத்துக்குடி லூசியா மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கி தீபாவளியை கொண்டாடினார்.
தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் உள்ள லூசியா மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சென்று அங்குள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கியதுடன் மேலும் அங்கே குடும்பத்துடன் தங்கியிருப்பவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களையும் வழங்கினார்.
அமைச்சர் கீதாஜீவன் மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கு வந்து குழந்தைகளுடன் மத்தாப்பு கொளுத்தியும், வாழ்த்துக்கள் கூறியும் தீபாவளியை கொண்டாடியதால் அங்கிருந்த மாற்றுத்திறனாளி குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தனர்.
நிகழ்ச்சியில், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் மற்றும் கருணா, மணி, அல்பர்ட் உள்பட பலர் உடனிருந்தனர்.

