தூத்துக்குடி
என்.பெரியசாமி கல்வி அறக்கட்டளை நிறுவனரும், தூத்துக்குடி கீதாகல்வி குழுமங்களின் செயலாளரும் மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளருமான ஜீவன்ஜேக்கப்- வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தம்பதியினரின் மணிவிழா கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு காலையில் கலெக்டர் லட்சுமிபதி, எஸ்பி பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், தொழிலதிபரும், வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு அமைப்பாளருமான எஸ்டிஆர் பொன்சீலன், உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஜீவன் ஜேக்கப்- அமைச்சர் கீதாஜீவன் தம்பதியினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் உள்ள மகிழ் அக்வா நிறுவன அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜீவன் ஜேக்கப்- அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தங்கள் ஊழியர்கள் மத்தியில் கேக் வெட்டி மணி விழாவினை கொண்டாடினர். இதில், டாக்டர் மகிழ்ஜான் சந்தோஷ் மற்றும் ராஜாசிங், சுடலைராஜ், தினகரன், மீனாட்சி சுந்தரம், சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் தூத்துக்குடி ஏவிஎம் கமலவேல் மஹாலில் மணிவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் வரவேற்புரையாற்றினார். பனிமயமாதா கோவில் பங்குதந்தை குமார்ராஜா மாதா படம் வழங்கி ஆசீர்வதித்தார். பின்னர் மாலை மாற்றிக்கொண்டு கேக் வெட்டினார்கள்.

நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, முன்னாள் எம்.எல்.ஏ சுடலையாண்டி, வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், மாநில காங்கிரஸ் துணை தலைவர் ஏபிசிவீ சண்முகம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிஎஸ் முரளிதரன், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர் அர்ஜுனன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன், மாநகர செயலாளர் ஞானசேகர், தமாகா வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல், விசிக மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன், வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் ரமேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விநாயகாரமேஷ், மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன், இலக்கிய அணி துணை செயலாளர் மகாராஜன், இளைஞர் அணி அமைப்பாளர் சரவணப்பெருமாள், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், இராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், தொழிலதிபர்கள் போர்ட் சிட்டி சூர்ய மூர்த்தி, பிரேம்வெற்றி, ஜோ பிரகாஷ், டேவிட், செல்வின் பிரபு, அண்ணாமலைச்சாமி, ஆறுமுகச்சாமி, சிவராமன், மாரியப்பன், ராஜேந்திரன், டாக்டர்கள் அருள்ராஜ், நந்தினி சுபேந்திரன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, முன்னாள் எம்பி ஏடிகே ஜெயசீலன், ஒன்றிய செயலாளர்கள் காசி விஸ்வநாதன், மும்மூர்த்தி, முருகேசன், செல்வராஜ், சின்னபாண்டியன், சுப்பிரமணியன், கருப்பசாமி, ராதாகிருஷ்ணன், பேரூர் செயலாளர் சுரேஷ்கண்ணன், தலைமை பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், தமிழ்பிரியன், மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், பாலகுருசாமி, அன்பழகன், கவிதாதேவி, ரமேஷ், அபிராமிநாதன், அசோக், குபேர்இளம்பரிதி, அந்தோணிஸ்டாலின், துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, பார்வதி, பாக்கியத்துரை, நாகராஜன் பாபு, ராமர், ஜோசப் அமல்ராஜ், கோகுல்நாத், ஆபிரகாம், ராதாகிருஷ்ணன், சின்னத்துரை, மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினரும் மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளருமான தங்கமாரியம்மாள், மாநகர திமுக அவைத்தலைவர் ஏசுதாஸ், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொருளாளர் அனந்தையா, அரசு வழக்கறிஞர்கள் சுபேந்திரன், மோகன்தாஸ் சாமுவேல், ஆனந்தகபிரியேல்ராஜ், மாலாதேவி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, சிவன் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், தலைமை அர்ச்சகர் வைகுண்டராமன், சிவன்கோவில் செயல் அலுவலர் தமிழ்செல்வி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மந்திரமூர்த்தி, ஆறுமுகம், மேலூர் பத்திரகாளியம்மன்கோவில் அறங்காவலர் குழு தலைவர் கீதாசெல்வமாரியப்பன், தெப்பகுளம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்வசித்ரா, மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், ஜெயக்குமார், மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்சுந்தர், ஜெயக்கனி, முருகஇசக்கி, டேனி, வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின், பால்ராஜ், கருப்பசாமி, ராஜேந்திரன், ரவி, பிரவீன்குமார், சீதாலட்சுமி, மணி, ஆர்தர்மச்சாது, மாநகர அணி நிர்வாகிகள் பிக் அப் தனபால், சக்திவேல், நலம் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வகுமார், சேர்மபாண்டியன், மீனாட்சி சுந்தரம், ராஜ்குமார், தொழிற்சங்க நிர்வாகிகள் மரியதாஸ், முருகன், சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் திருப்பணி கமிட்டி முன்னாள் செயலாளர் சண்முகசுந்தரம், திட்டக்குழு உறுப்பினர் ஐயாத்துரைபாண்டியன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், நாடார் மஹாஜன சங்க மாவட்டசெயலாளர் சதீஷ், பரதர்நல சங்க தலைவர் ரெனால்டு வில்லவராயர், பொருளாளர் காஸ்ட்ரோ, வியாபாரிகள்; சங்க தலைவர் விநாயகமூர்த்தி, பாஸ்கர், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், இசக்கிராஜா, சரவணக்குமார், பவாணி, வைதேகி, சுப்புலட்சுமி, சுதா, சரண்யா, மரியகீதா, மகேஸ்வரி, ராமுத்தம்மாள், மெட்டில்டா, எடின்டா, முத்துமாரி, தனலட்சுமி, ஜான்சிராணி, தெய்வேந்திரன், கந்தசாமி, கண்ணன், ரிக்டா, பேபி ஏஞ்சலின், ஜாக்குலின்ஜெயா, முத்துவேல், விஜயகுமார், விஜயலட்சுமி, கற்பக்கனி, நாகேஸ்வரி, கூட்டுறவு ரேசன்கடை சங்க செயலாளர் வேல்முருகன், துணை செயலாளர் சண்முகராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, சுப்பையா, ரவீந்திரன், லியோஜான்சன், சுரேஷ்குமார், மனோ, பொன்ராஜ், கருப்பசாமி, ராஜாமணி, சேகர், செந்தில்குமார், பத்மாவதி, டென்சிங், உதயநிதி நற்பனி மன்ற துணைத்தலைவர் டைகர் வினோத், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், செல்வராஜ், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, காங்கிரஸ் கட்சி சிறுபான்மைபிரிவு தலைவர் மைதீன், ஐஎன்டியுசி தலைவர் ராஜீ, காங்கிரஸ் மண்டல தலைவர்கள் சேகர், ராஜன், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், ஊடகப்பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், விவசாய பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம், கலை இலக்கியப் பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் செல்வராஜ், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர்கள் விஜயராஜ், பிரபாகரன், மைக்கில் பிரபாகர், அருணாசலம், ரஞ்சிதம் ஜெபராஜ், டேவிட் வசந்தகுமார், சின்னகாளை, மாவட்ட பொதுச் செயலாளர் மிக்கேல் பர்னாந்து, மாவட்ட செயலாளர்கள் கோபால், ஜெயராஜ், நாராயணசாமி, சேவியர் மிஷியர், ஜோ பாய் பச்சேக், அலெக்ஸ், திமுக மகளிர் அணி டோலி, கன்னிமரியாள், சத்யா, சந்தனமாரி, ரேவதி, பெல்லா, மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், லிங்கராஜா, மகேஸ்வரசிங், உலகநாதன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கயாஸ், தூத்துக்குடி மூத்த செய்தியாளர்கள் ஆத்திமுத்து, சண்முகசுந்தரம், கண்ணன், செய்தியாளர்கள் ராஜு, பாலகிருஷ்ணன், மாரிமுத்து, ஜெகஜீவன், காசிராமன், அண்ணாத்துரை, அல்போன்ஸ், ராஜேந்திரபூபதி, முருகன், அமைச்சரின் நேர்முக உதவியாளர்கள் கருணாநிதி, கல்யாணசுந்தரம், ரஜினிகாந்த், மங்களராஜ் இம்மானுவேல், அமைச்சரின் பாதுகாப்பு அலுவலர்கள் எபனேசர், மோகன், ஹரிஹரபுத்திரன், அமைச்சரின் அலுவலக பணியாளர்கள் மணி, அல்பட் பிரதீப், கோபிநாத், உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்கள்.
அமைச்சர் கீதாஜீவன் நன்றி தெரிவித்து பேசுகையில் எனது தந்தை என்.பெரியசாமி என்னை அரசியலில் அறிமுகப்படுத்தி கொண்டு வந்தார். முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்ததுதான் என்னுடைய முழுமையான பணிகளை செய்வதற்கும் ஊக்கமாக அமைந்தது. அவர்களுடைய இந்த ஒத்துழைப்பு மற்றும் ஆதரவினால் தான் நான் அரசியலில் இந்த அளவு வளர்ந்துள்ளேன். எனது குடும்பத்தினரும் எனக்கு பின்பலமாக இருந்து கொடுத்த ஆதரவு தான். எனக்கு இவ்வளவு பெரிய வெற்றியை கொண்டு வந்துள்ளது. இன்று எனக்கு கிடைக்கும் பாராட்டும், புகழ்ச்சியும் கழக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினையே சாரும் என்றார்.
மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ பேசுகையில் கடந்த 3 ஆண்டுகளாக நான் பழகி வருகிறேன் ஓவ்வொரு செயலிலும் அமைச்சர் கண்ணும் கருத்துமாக இருந்து முதல்வரின் எதிர்ப்பார்ப்புகளை காட்டிலும் நல்ல முறையில் செய்து அமைச்சர்களில் பெண் சிங்கம் என்ற பெயரை முதல்வரிடம் பெற்று இந்த குடும்பத்தினர் ஓத்துழைப்பு வழங்கினார்கள் என்பதை காட்டிலும் அவரது கணவர் ஓத்துழைப்பு அதிகம், அதனால் அரசியலில் பிரகாசித்து வருகிறார். வாழ்த்துவதற்கு வயதில்லை. வணங்குகிறேன் மேலும் பல சாதனைகளை பெற இறைவனை வேண்டுகிறேன். என்றார்.
மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சண்முகம் பேசுகையில் எனக்கும் பெரியசாமிக்கும் சிறிய கருத்து வேறுபாடுகள் இருந்ததுண்டு ஆனால் கலைஞர் இடும் கட்டளையை ஏற்று செய்கின்ற ஓவ்வொரு பணியும் சிறப்பாக இருக்கும் அதனால் தான் முரட்டுபக்தன் என்ற பெயரோடு வலம் வந்தார். இன்று மாநகர் மக்களின் பாதுகாவலர்களாக அவர்களது பிள்ளைகள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களது திருமணத்தையே நான் வாழ்த்தியவன். இன்று மணிவிழா அடுத்து சதாபிஷேவிழா நடைபெற வேண்டும் என்று நான் வணங்கும் செந்தில்முருகனை வேண்டிகொள்கிறேன். என்றார்.
கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் பேசுகையில் திமுக மாவட்ட செயலாளராக எம்.எல்.ஏவாக நகர்மன்ற தலைவராக பெரியசாமி இருந்து பணியாற்றிய காலத்தில் தேர்தல் சமயங்களில் அனைவரையும் அரவனைத்து நல்ல முறையில் பணியாற்றுவார். இன்று அதே வழியில் அவரது மகளும் எல்லோரையும் மதித்து பணியாற்றுகிறார் தொடர்ந்து பல சாதனைகளை புரிய வேண்டும் என்று பேசினார்கள்.
விழாவிற்கு வந்த அனைவருக்கும் ஜீவன் ஜேக்கப்-கீதாஜீவன், மகிழ்ஜான் சந்தோஷ், கீர்த்தனா மகிழ், ராஜேஷ் இம்மானுவேல், ஜீனா எபி சுந்தரி மற்றும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

