தூத்துக்குடி, ஆக்,29
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணியில் முத்துராமலிங்க தேவர் 116வது ஜெயந்திவிழா மற்றும் 61வது குருபூஜை விழாவையொட்டி 3ம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தய விழாவிற்கு சண்முகையா எம்.எல்.ஏ தலைமை வகித்தார். தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவுகடன் சங்க தலைவருமான சரவணக்குமார், மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டேவிஸ்புரம் முதல் தருவைகுளம் வரை 5 மைல் பூஞ்சிட்டு 51 ஜோடி, 4 மைல் தேன்சிட்டு 27 ஜோடி மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை சண்முகையா எம்.எல்.ஏ, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவுகடன் சங்க தலைவருமான சரவணக்குமார், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
பூஞ்சிட்டு போட்டியில் வெற்றி பெறும் மாட்டு வண்டிகளுக்கு முதல்பரிசாக ரூ 20 ஆயிரம் பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார், வழங்கினார் இரண்டாம் பரிசாக ரூ 17ஆயிரம் ரவி என்ற பொன்பாண்டியும்,மூன்றாவது பரிசாக ரூ14 ஆயிரம் எஸ்.ஆர் கணேசன், தங்ககணேஷ், நான்காம் பரிசாக ரூ 11 ஆயிரம் வழங்கினர்.
சின்னக்காளை, ஐந்தாம் பரிசாக ரூ 9 ஆயிரம் சர்க்கரை தேவர் நினைவாக முத்துபாண்டி, தேன்சிட்டு முதல்பரிசாக ரூ 12 ஆயிரம் சுரேஷ், இரண்டாம் பரிசாக ரூ 10 ஆயிரம் முத்துதேவர் நினைவாக காளிமுத்து தேவர், மூன்றாம் பரிசாக ரூ 8 ஆயிரம் ராஜேந்திரன், ராமசந்திரன்,
நான்காம் பரிசாக ரூ 6 ஆயிரம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து,வழங்கினார்கள்ஐந்தாம் பரிசாக ரூ 4 ஆயிரம் சுப்பையா தேவர், மணிகண்டன், ஆகியோர் வழங்கினார்கள்.

விழாவில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, துணை அமைப்பாளர் ஜீவா, மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, தெற்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான தங்கமாரிமுத்து, ஒன்றிய துணைச்செயலாளர் ராமசந்திரன், திமுக மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கண்ணன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, திமுக ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மகாராஜா, திமுக கிளைச்செயலாளர்கள் பொன்னுச்சாமி, குமார், தமிழ்;நாடு தேவர் பேரவை இளைஞர் அணி மற்றும் நேதாஜி நற்பணிமன்றம் ரேக்ளா கமிட்டியாளர்கள் சந்தனகுமார், பொன்ராஜ், ராஜா, சுடலை, முத்துகிருஷ்ணன், பாலு, அர்ஜுனன், மூக்காண்டி, மணிகண்டன், பாண்டி, பாஸ்கர், முத்து, திமுக இளைஞர் அணி கௌதம்,, உள்பட மாட்டுவண்டி போட்டி ரசிகர்கள் பொதுமக்கள் என திரளானோர் பலர் கலந்து கொண்டனர். மாட்டு வண்டி போட்டியையொட்டி காவல்துறையினர் போக்குவரத்தை சீர்செய்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

