• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஆயிரம் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. சண்முகபுரம் கோவில் தசரா விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

policeseithitv by policeseithitv
October 24, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஆயிரம் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. சண்முகபுரம் கோவில் தசரா விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் தசரா விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினசரி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. 9ம் நாள் நவராத்திரி சரஸ்வதி பூஜையை யொட்டி 50ம் ஆண்டு சண்முகபுரம் இளைஞர் முன்னேற்ற அணியினர் சார்பில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சிக்கு இளைஞர் அணி ஓருங்கிணைப்பாளரும் திமுக வட்டச்செயலாளருமான பொன்ராஜ், தலைமை வகித்தார்.

அமைப்பாளர்கள் முத்துமாரியப்பன், சுரேஷ், முத்துக்குமார். ராஜேஷ், செல்வசுபாஷ், சூரியகாந்த், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் பேபி ஏஞ்சலின் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து இன்னிசை கச்சேரியை கண்டுகளித்து பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் மாநில அளவில் முதலிடமும் தேசிய அளவில் இரண்டாம் இடமும் பெற்ற காயத்ரிக்கு இளைஞர் அணி சார்பில் நினைவு பரிசு வழங்கி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தங்கநாணயம் உள்ளபட 50 பரிசு பொருட்களை வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் சிறப்பான நிகழ்ச்சி அருமையான முறையில் நடைபெறுகிறது. அதில் இன்னிசை கச்சேரி நம் எல்லோருக்கும் ஓரு குறிப்பிட்ட நேரம் வரை அனைவருடைய உள்ளத்தில் ஓருவகையான மகிழ்ச்சியை ஏற்படுத்தி நிம்மதியை கொடுக்கும் நிகழ்வாகும் இசைக்கு எல்லோரும் அடிபணிந்து ரசிப்பார்கள் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இரண்டரை ஆண்டுகாலத்தில் அறநிலைத்துறை சார்பில் 1000 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதே போல் 5 ஆயிரம் கோடி மதிப்பிலான அறநிலைத்துறைக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து மதத்தினரும் மகிழ்ச்சியாக இருக்கின்றன. எல்லா மதத்ததையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால் மதவெறியைதான் வெறுக்கிறோம் கடந்த அதிமுக ஆட்சியின் போது கொரோன காலக்கட்டத்தில் எல்லோருமே முடங்கிபோய் கிடந்தோம் எவ்வித வளர்ச்சியும் இல்லை. இப்போது திமுக ஆட்சி வந்தபிறகு எல்லா கோவில்களிலும் எல்லா நிகழ்ச்சிகளும் நல்ல முறையில் நடைபெறுகிறது. அதே போல் வியாபாரிகளுக்கு இரவு 10 மணி வரை இயங்கலாம் என்று இருந்ததை அவர்களது கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் 12மணி வரை கடைகளை திறந்திருப்பதற்கு ஆணை பிறப்பித்துள்ளார். இப்படி தமிழகத்தில் எல்லா துறைகளிலும் நல்ல வளர்ச்சியடைந்து பொருளாதார நிலை உயர்ந்து இந்தியாவிற்கே வழிகாட்டும் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. பத்திரகாளியம்மன் கோவில் அம்மன் அருளாசியோடு அனைவரும் எல்லா செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் என்று பேசினார்.

விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன், வட்ட செயலாளர் சுரேஷ், கோவில் துணைசெயலாளர் பொன்ஆனந்த், தொழிலதிபர் சுந்தர்ராஜ், வியாபாரிகள் சங்க செயலாளர் கணேசன், முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங், திருப்பணி கமிட்டி முன்னாள் செயலாளர் சண்முகசுந்தரம், நிர்வாகிகள் ராஜசேகர், கலியுகவரதன், சந்தர், ஜெயக்குமார், ரவி, சங்கர், நாகேந்திரன், ராஜா, பாஸ்கர், குமரன், காமாட்சி, ஸ்டார், உள்பட பக்தர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

Next Post

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமையில் நடைபெற்றது.

Next Post
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமையில் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In