• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மோடியையும் நீட்டையும் இந்தியா கூட்டணி விரட்டும் – தூத்துக்குடி கையெழுத்து இயக்க நிகழ்வில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்எல்ஏ பங்கேற்பு

policeseithitv by policeseithitv
October 21, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மோடியையும் நீட்டையும் இந்தியா கூட்டணி விரட்டும் – தூத்துக்குடி கையெழுத்து இயக்க நிகழ்வில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்எல்ஏ பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

இந்தியாவில் மத்திய அரசு நீட் தேர்வு நடத்தி அதன் மூலமே மருத்துவ கல்வியை பெற வழிவகுத்து வருகிறது. இந்த நடைமுறையால் தமிழகத்தில் உள்ள மாணவ-மாணவியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறி பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதில் ஆளும் கட்சியான திமுக மத்திய அரசின் நீட் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி, மருத்துவரணி இணைந்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைதுறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார்.

வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், மருத்துவரணி அமைப்பாளர் சௌந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாணவரணி, மருத்துவரணி இணைந்து நடத்துகின்ற நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கையெழுத்து இயக்க அறப்போர் தமிழகத்திலிருந்து விரட்டும் வரை தொடர் நிகழ்வாக இருக்கும். தேவையில்லாத ஒன்றை நம்மீது திணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மாணவர்களின் எதிர்காலம் கருதி இந்த நீட் தேர்வை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம் என்று பேசினார்.

தலைமை பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா பேசுகையில்: தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக 23 பேர் மரணம் அடைந்துள்ளனர். திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வோம் என்று கூறியிருந்தோம். அதன்படி ஆட்சிக்கு வந்த காலம் முதல் இன்று வரை அதற்காக முன்னெடுத்து செய்த பணிகள் ஏராளம். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியதை அவர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளார். திருத்தம் செய்து மற்றுமொரு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளோம். தமிழகத்திலிருந்து நீட் தேர்வை அப்புறப்படுத்தும் வரை போராட்டம் தொடரும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். அதன்படி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று முடிந்து, இப்போது கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 50 நாட்கள் 50 லட்சம் கையெழுத்து பெற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்;டுள்ளது. தமிழகத்திலிருந்து நீட் தேர்வையும், பிரதமர் பதவியிலிருந்து மோடியையும் 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி விரட்டும், இவ்வாறு பேசினார்.

கையெழுத்து இயக்க துவக்க நிகழ்வில், மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்எல்ஏ, துணை மேயர் ஜெனிட்டா, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகர துணைச்செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், இராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் அன்னலெட்சுமி, கலைச்செல்வி, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள்; முருகேசன், சின்னப்பாண்டியன், ராதாகிருஷ்ணன், காசிவிஸ்வநாதன், மும்மூர்த்தி, செல்வராஜ், சின்னமாரிமுத்து, நவநீதகண்ணன், அன்புராஜன், ராமசுப்பு, மாவட்ட அணி அமைப்பாளர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்பழகன், குபேர்இளம்பரிதி, கவிதாதேவி, ரமேஷ், துணை அமைப்பாளர்கள் பிரதீப், ஜோசப் அமல்ராஜ், ஜுடி, பார்வதி, மகேந்திரன், ராதாகிருஷ்ணன், பாரதி, கோகுல்நாத், பார்வதி, பெனில்டஸ், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் சேர்மபாண்டியன், செல்வகுமார், நாராயணன், மாநகர அணி அமைப்பாளர்; அருண்சுந்தர், வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், ஜெயக்கனி, பரமசிவம், சீத்தாராமன், துணை அமைப்பாளர்கள் சிவகுமார் (எ) செல்வின், சங்கரநாராயணன், ரவி, டைகர் வினோத், பிரவின்குமார், பால்ராஜ், குமரன், சீத்தாலெட்சுமி, ஜெய்லுதீன், கருப்பசாமி, கவுன்சிலர்கள் சரவணக்குமார், தெய்வேந்திரன், இசக்கிராஜா, ராமர், பவானி மார்ஷல், வைதேகி, மெட்டில்டா, அதிஷ்டமணி, ஜாக்குலின்ஜெயா, பொன்னப்பன், நாகேஸ்வரி, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், ஜெயசீலி, விஜயகுமார், மரிய கீதா, கண்ணன், அரசு வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல், வட்ட செயலாளர்கள் பாலகுருசாமி, கதிரேசன், சுப்பையா, மூக்கையா, சதீஸ்குமார், செந்தில்குமார், பொன்னுச்சாமி, முத்துராஜா, செல்வராஜ், கருப்பசாமி, பொன்ராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் நவநீதன், ஜெயசிங், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, மகளிரணி ரேவதி, பெல்லா, சத்யா, சந்தனமாரி, இந்திரா, மற்றும் கருணா, மணி, மகேஸ்வரன்சிங், அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்ட ரெங்கசாமி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்துப் பெற்றார்.

Next Post

தூத்துக்குடி மாநகர அயலக அணி நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனர்.

Next Post
தூத்துக்குடி மாநகர அயலக அணி நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனர்.

தூத்துக்குடி மாநகர அயலக அணி நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In