கோவில்பட்டியில் ஒருதலை காதல் தோல்வியடைந்ததால் இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்தவர் நயினா முகம்மது மகன் செய்யது யாசின் (24), இவர் ஒரு இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்தாராம். ஆனால் அந்த பெண் அவரது காதலை ஏற்கவில்லையாம். இதனால் காதல் தோல்வியால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோவிலபட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

