• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகரில் தொடரும் ஊழலால் தொடராத காதல்

policeseithitv by policeseithitv
October 20, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகரில் தொடரும் ஊழலால் தொடராத காதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 52 வார்டுகளும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 8 வார்டுகளும் உள்ளடக்கி 60 வார்டுகள் கொண்ட பகுதியாக இருந்து வருகிறது.

இதில் பெண் கவுன்சிலர்கள் 32 பேர்களும், ஆண் கவுன்சிலாகள் 28 இதில் மேயர், துணை மேயர் உள்ளடக்கம். மேயராக ஜெகன் பெரியசாமியும் துணை மேயராக ஜெனிட்டா செல்வராஜும் பணியாற்றி வருகின்றனர்.

அரசு துறை அதிகாரியாக ஆணையர், துணை ஆணையர், செயற்பொறியாளர், பொறியாளர், உதவி ஆணையர், சுகாதார அலுவலர்கள் என பல்வேறு பணிகள் சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மாநகர மக்களின் குறைகளை கண்டறிந்து தீர்த்து வைப்பது, முறையாக மாநகராட்சி சார்ந்;த பல்வேறு வரிகள் வசூல் செய்வது போன்ற பணிகள் அவர்களது கடமையாகும். இதனை கடந்து அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட பொருட்களை யாரும் விற்பனை செய்தால், மாநகராட்சி அதிகாரிகள் கள ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட கடைகள் மீது நடவடிக்கை உரிய எடுப்பது வழக்கமான பணிகளாக இருந்து வருகிறது. இதில் சில அரசு துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் விதிமுறைகளை மீறி பல இடங்களில் இடையூறுகள் செய்து அரசுக்கும், திமுக கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர், துணை மேயர் மக்களோடு மக்களாக பழகி, குறைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு கண்டு வருகின்றனர். இதற்கு நேர்மாறாக அதிகாரிகள் சிலர் செயல்படுவதால், பல்வேறு வகையில் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். சோதனை என்ற பெயரில் நடக்கும் கூத்துக்களால் வியாபாரிகளுக்கு வேதனை தான் மிஞ்சுகிறதாம்.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மார்க்கெட் பகுதியில் இயங்கும் பிரபல மளிகை கடைக்கு பல்வேறு இடையூறுகள் கொடுத்து கடைக்கு சீல் வைத்துள்ளனர். எல்லா விசயத்திலும் அரசு அலுவலர்கள் இதே போல் நேர்மையாக செயல்படுகிறார்களா? என்று வியாபாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த வியாபாரிகளும் தங்களது முடிவை கூட்டத்தின் மூலம் எடுக்கப்பட்டு தாங்கள் வாக்களிக்க இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேயர் பொறுப்பேற்ற சில மாதங்களில் 152 பூங்கா இருக்க வேண்டிய மாநகராட்சி பகுதியில் வெறும் 111 பூங்கா எங்கு இருக்கிறது? என்ற கேள்வியை எழுப்பி பல்வேறு தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்த இடத்தை பல மீட்டுள்ளார். இன்னும் மீட்கப்படாமல் பல இடங்கள் இருந்து வருகின்றன. இதுபோன்ற இடங்களை தாரை வார்த்த மாநகராட்சி அதிகாரிகள் யார்? என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்புகின்றன.

மாநகராட்சி பகுதியில் இயங்கும் ஒருசில கடைகளை மட்டும் களஆய்வு செய்து தங்கள் கடமை நிறைவேற்றியதாக கூறும் அதிகாரிகள், பாரபட்சமின்றி அனைத்து பணிகளிலும், குறிப்பாக சுத்தமான குடிநீர், மழைநீர் வடிகால், கழிவுநீர், தெரு விளக்கு, தரமான சாலைகள் போன்ற விசயங்களில் 100 சதவீதம் நிறைவேற்றி விட்டார்களா என்று தூத்துக்குடி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Previous Post

தூத்துக்குடி விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

Next Post

தூத்துக்குடி 36வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறை கேட்பு

Next Post
தூத்துக்குடி 36வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறை கேட்பு

தூத்துக்குடி 36வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறை கேட்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In