• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பி.எம்.டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் முப்பெரும் விழா இசக்கிராஜா கல்வி உதவித்தொகை வழங்கினார்.

policeseithitv by policeseithitv
October 9, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பி.எம்.டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் முப்பெரும் விழா இசக்கிராஜா கல்வி உதவித்தொகை வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தூத்துக்குடி தனியார் மண்டபத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவிற்கு மாநில தலைவர் இசக்கிராஜா தேவர் தலைமை வகித்தார்.

பி.எம்.டி. மக்கள் பாதுகாப்பு இயக்கம் 7 ஆம் ஆண்டு துவக்க விழா மருதுபாண்டியர், பூலித்தேவர், குருபூஜை, முத்துராமலிங்க தேவர் 116வது குருபூஜையை முன்னிட்டு மாணவ-மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

கல்வி உதவித்தொகை வழங்கி, சிறப்புரையாற்றிய இசக்கிராஜா தேவர் பேசுகையில்: சமுதாய சொந்தங்கள், அனைவரும் ஒற்றுமையுடனும் பாதுகாப்புடனும் வாழ வேண்டும் என்பது தான் இந்த இயக்கத்தின் நோக்கம். தொடர்ந்து சமுதாயப் பணிகளையும், மக்கள் நலன் பாதுகாக்கும் வகையில் நான் பணியாற்றுவேன்.

கடந்த 92 வருடங்களாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாமல் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பை பெறுவதில் மிகவும் பின் தங்கி உள்ளன. தனித்தனி நபர்களாக கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம், அரசியல் சாசன சட்டத்தில், மத்திய அரசுக்கு மட்டுமேயான அதிகாரங்களை வழங்கும் பட்டியல் 1 இல் உள்ளது. மாநிலங்களும் கணக்கெடுப்பு நடத்தும் வகையில் அதிகாரம் அளிக்க, மத்தியஅரசு அதனை பொதுப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பின் படி இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை இயங்கியபோது தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்தது. தற்போது அந்த ஆலை மூடப்பட்டு இருப்பதால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம்.

அரசு விரைந்து உச்சநீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்து ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை காலம் தாழ்த்தாது திறந்திட ஆவணம் செய்ய வலியுறுத்தப்படுகிறது. இதன் மூலமாக இளைஞர் வேலைவாய்ப்பும் தமிழக பொருளாதாரமும் மேம்படும். வெளிநாட்டு முதலீட்டினை தமிழகத்திற்கு கொண்டுவர முனைப்பாக செயல்படும் தமிழக அரசு தூத்துக்குடியில் ஐந்து வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை திறக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் வந்தால்தான் தூத்துக்குடியில் தொழில்கள் சிறக்கும். ஸ்டெர்லைட் ஆலை கொடுத்த ஆதரவால் லாரி உரிமையாளர்கள் சிறுதொழில்கள் நன்றாக இருந்தது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துவது.

 

மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு சுதந்தித்திற்காக பாடுபட்டு நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் உற்ற நண்பனாக தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் என இன்றளவும் இந்திய மக்கள் மனதில் வாழ்ந்;து கொண்டிருக்கும் தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை தேவரின் மக்களால் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தின் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு ஏற்கனவே தேர்தல் நேரத்தில் தாங்கள் அளித்த மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

மாநில பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், இளைஞர் அணி செயலாளர் சுந்தரபாண்டியன், துணைத்தலைவர் மாடசாமி, செயலாளர்கள் வெள்ளக்கன்னு, ராஜசேகர், நம்பிகுமார், செல்லசக்தி, முத்துகிருஷ்ணன், ஈஸ்வரபாண்டியன், இசக்கி, முத்துராமன், ராம்குமார், வழக்கறிஞர் பிரிவு சுப்பிரமணியன், பூச்செல்வம், பொறுப்பாளர்கள் பொன்பாண்டி, சப்பாணிமுத்து, கோபால், அருண்குமார், பிரபு, ராதாபாண்டி, சுந்தரபாண்டியன், மாநகர பொறுப்பாளர்கள் தளவாய் பாண்டியன், ஆதி, முத்துக்குமார், நாகராஜ், கண்ணன், மகேஸ், வரலாற்று ஆசிரியர்கள் ஐயா நவமணி, வானதி முனிராஜ் உள்பட பல்வேறு மாவட்டச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என 5000 பேர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, தூத்துக்குடி 3ம் மைலில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு ஊர்வலமாக வந்தனர்.

Previous Post

தூத்துக்குடியில் அரசு விழா கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் நேரு, தங்கம்தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ மார்க்கன்டேயன் மேயர் ஜெகன் பெரியசாமி கலெக்டர் செந்தில்ராஜு பங்கேற்பு

Next Post

தூத்துக்குடி கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்.

Next Post
தூத்துக்குடி கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்.

தூத்துக்குடி கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In