தூத்துக்குடி
தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருச்சி தனியார் மண்டபத்தில், சர்வதேச முதியோர் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பரிசுகள் வழங்கினார்.
மேலும் 90 வயதை கடந்த முதியவர்களை கௌரவித்து, தமிழ்நாடு அரசின் மூத்த குடிமக்களுக்கான மாநிலக்கொள்கை 2023 புத்தகத்தை திமுக முதன்மை செயலாளரும் நகர்புற மற்றும் நகராட்சி துறை அமைச்சர் நேரு வழங்கினார்.
விழாவில் எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ், அரசு அலுவலர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

