• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனர்.

policeseithitv by policeseithitv
September 26, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திராவிட முன்னேற்ற கழகத்தின் 15-வது கழக தேர்தல் முறையாக மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் வழிமுறைக்கு இணங்க தேர்தல் நடைபெற்று கிளை செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். திமுக தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின், பொதுச்செயலாளராக அமைச்சர் துரைமுருகன், பொருளாளராக பாலு, துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி உள்ளிட்ட உயர்மட்ட முக்கிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதன்பின் திமுகவின் கட்டமைப்பு படி 23 அணிகள் முறையாக செயல்படுகின்றன. அதற்கும், மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் பொறுப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்காணல் நடத்தப்பட்டு, திமுக ஆட்சியில் இல்லாத 10 ஆண்டுகள் தொடர்ந்து திமுகவில் பணியாற்றியதையும், கழகம் அறிவித்த போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்ட விவரத்தையும் கேட்டறிந்து, குறிப்பாக அவர்களில் தீவிர களப்பணி ஆற்றுபவர்கள் யார் என்பதை கண்டறிந்து

அதன்படி வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அமைப்பாளராக அன்பழகன், துணை அமைப்பாளராக சின்னத்துரை நியமணம் செய்யப்பட்டுள்ளதையடுத்து எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில் தமிழக முதலமைச்சர் தளபதியார் ஆட்சியில் செய்த சாதனைகளையும் திட்டங்களையும் மாநில வளர்ச்சி பணிகளையும் அனைத்து தரப்பினர்கள் மத்தியிலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பொறியாளர் அணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் அதிக உறுப்பினர்களை சேர்த்து மற்ற மாவட்டங்களை காட்டிலும் நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ்வதற்கு ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவருமான வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட பிரதிநிதி சக்திவேல், மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராபின், மற்றும் கருணா, மணி, அல்பட், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Previous Post

அதிமுக – பிஜேபி கூட்டணி முறிவு தூத்துக்குடியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினார்கள்.

Next Post

திருச்செந்தூர் கோவில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு –  போராட்டம் நடத்த ஊர் மக்கள் முடிவு

Next Post
திருச்செந்தூர் கோவில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு –   போராட்டம் நடத்த ஊர் மக்கள் முடிவு

திருச்செந்தூர் கோவில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு -  போராட்டம் நடத்த ஊர் மக்கள் முடிவு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In