தூத்துக்குடி, செப்,25
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மன்புரத்தில் அகில இந்திய நாடார் பாதுகாப்புபேரவை நிறுவனர் மூலக்கரை வெங்கடேஷ் பண்ணையார் 20 வது ஆண்டு
நினைவு வீரவழிபாடு நாளை (26/09/23) நடக்கிறது. இந்த வீர வழிபாட்டிற்கு தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல்
பிற மாநிலங்களில் உள்ள நாடார் அமைப்புகள், பல்வேறு சமுதாயத் தலைவர்கள், அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர்
இந்த வீர வழிபாட்டில் பங்கேற்கிறார்கள் . ஆண்டு தோறும் நடைபெறும் இந்த வீர வழிபாட்டிற்கு இளைஞர்கள் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏராளமான போலீசார் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீஸார்கள் ஏராளமானவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டு 20 வது ஆண்டு வீர வழிபாடு முன்னிட்டு சுபாஷ் பண்ணையார் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.
ஆகையால் இந்த ஆண்டும் வழக்கம்போல்
வீரவழிபாட்டிற்கு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், பல்வேறு சமுதாயத் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு வீர வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளனர். இந்த வீர வழிபாட்டிற்கு வரும் இளைஞர்கள் வாகனங்களில் வரும் பொழுது
அமைதி காக்க வேண்டும் எனவும் தேவையற்ற கோஷங்கள் எழுப்ப வேண்டாம் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய அறிவுரைகளை சுபாஷ் பண்ணையார் நாடார் அமைப்பு இளைஞர்களுக்கு வேண்டுகோள் கொடுத்துள்ளார்.

நாளை காலை
முதல் அம்மன் புரத்திற்கு பல மாவட்டங்களில் இருந்து முக்கிய பிரமுகர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள் என்பதால் போலீசார் பாதுகாப்பு பணி இன்று முதலே தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பண்ணையார் வீர வழிபாட்டிற்கு
பெருந்தலைவர் மக்கள் கட்சி, மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை நிறுவனர் என் ஆர் தனபாலன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துகிறார். என் ஆர் தனபாலன் தூத்துக்குடி வருகை தரும் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த
பெருந்தலைவர் மக்கள் கட்சி, மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை நிர்வாகிகள் தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ளனர். இன்று இரவு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள ஜி ஆர் டி ஓட்டலில் தங்கும் என் ஆர் தனபாலன் நாளை காலை 8 மணி அளவில்
பெருந்தலைவர் மக்கள் கட்சி,
தூத்துக்குடி மாவட்ட செயலாளர்
எஸ்.பி மாரியப்பன், ரவி சேகர் மில்லை தேவராஜ், ஆகியோர் ஏற்பாட்டில்
பெருந்தலைவர் மக்கள் கட்சி, மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை நிர்வாகிகள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து அங்கிருந்து ஏராளமான வாகனங்களில் அம்மன்புரம் வீர வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.
என் ஆர் தனபாலன் தலைமையில்
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ் பி மாரியப்பன் ஏற்பாட்டில் நாளை பல்வேறு வாகனங்களில்
தமிழ்நாடு நாடார் பேரவை நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதால் போலீசார் ஜி ஆர் டி ஹோட்டல் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

