டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் : தூத்துக்குடியில்
பெருந்தலைவர் மக்கள் கட்சி, மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை
நிர்வாகிகள்
மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி, செப்,24
பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூரில் உள்ள அவரது மணிமண்டபம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.
திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87 ஆவது பிறந்தநாள் விழா, அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ்
ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதுபோல் தூத்துக்குடி
காமராஜர் மார்க்கெட் அருகில் அமைக்கப்பட்டிருந்த
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் திரு உருவப் படத்திற்கு
பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளான மாவட்ட செயலாளர் S.P மாரியப்பன், மாவட்ட தலைவர் M. S.T.ரவி சேகர், மாவட்ட பொருளாளர் மில்லை தேவராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் அருண்குமார், மற்றும் வின்சென்ட், கதிரேசன், ரஞ்சித், பெத்து விஷ்ணு, அலாட் குமார். உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
செய்தி தொகுப்பு :
கண்ணன்

