விளாத்திகுளம் உட்கோட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி போக்சோ குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம்,விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எட்டயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த17.12.2020 அன்று திருச்செந்தூர் அழைத்துச் சென்று, சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்து திருச்செந்தூர் பகுதியில் தனிமையில் விட்டுவிட்டு தலைமறைவான கூசாலிப்பட்டி மேட்டுதெருவைச் சேர்ந்த இசக்கியப்பன் மகன் வான்பாபு மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான எதிரியை தேடி வந்தனர். பின்னர் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தனிப்படை அமைத்து எதிரியை தீவிரமாக தேடி வந்தனர்.அதன் பலனாக தலைமறைவான எதிரி வான் பாபு பிடிக்கப்பட்டான் .

எதிரி மீது போக்சோ வழக்கு உள்ள காரணத்தால் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்ஆய்வாளர் மீரல்பானு எதிரியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். அதன்படி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் எதிரியை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்கள். அதன்படி பாளையங்கோட்டை சிறையில் எதிரி வான்பாபு அடைக்கப்பட்டான்.

