தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டம் பன்னீர்குளம், தெற்குமயிலோடை, திருமலாபுரம் மற்றும் கழுகாசலபுரம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற மக்கள் களம், மக்களிடம் குறைகேட்டல் நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் கனிமொழி எம்.பி சமூகபாதுகாப்பு திட்ட உதவித்தொகைகள், சிறு குறு விவசாயிகள் சான்று, மகளிர் சுய உதவிக்குழு கடன்கள், கூட்டுறவுத்துறை மூலம் பயிர்கடன்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பயனாளிகளுக்கு பயனாளர் அடையாள அட்டைகள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக் கலைத்துறை சார்பில் விதைகள் மற்றும் இடுபொருள் மானியங்கள் என மொத்தம் 193 பேருக்கு ரூ.94,91,970 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்;கி தெரிவிக்கையில்
மக்கள் களம் நிகழ்ச்சிகிட்டத்தட்ட இது 44வது கிராமத்திற்கு வந்திருக்கிறோம். இந்த மக்கள் களம் நிகழ்ச்சி அப்படி என்கிறது பொதுவா உங்களுக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது என்றால் அதிகாரியை பார்க்க போக வேண்டும். அவர்கள் வேலையா இருந்தால் உயர்அதிகாரியை பார்க்க வேண்டும். இல்லை யென்றால் ஆட்சியர் அலுவலகத்திற்கு தூத்துக்குடி வரவேண்டும் இப்படி கஷ்டபடாமல் இருக்க அமைச்சர், மக்கள் பிரதிநிதிகள், கூடுதல் ஆட்சியர் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உங்களை பார்த்து மனுக்களை வாங்கக் கூடிய நிகழ்ச்சி தான் மக்கள் களம் நிகழ்ச்சி பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்து நிச்சயமாக எதை யெல்லாம் நிறைவேற்றி தரமுடியுமோ விரைவில் நிறைவேற்றி தருவோம் என்ற உறுதியை உங்களுக்கு நான் தருகிறேன். அதுமட்டுமல்லாமல் இன்று இந்த நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வாய்ப்பும் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. சமூகபாதூப்புதிட்டத்தின்கீழ் உதவித்தொகை,சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அட்டைகள், இடுபொருள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன், பயிர் கடன் என்று பல்வேறு பல்வேறு திட்டங்களின் வழியாக நலத்திட்டங்களை இந்த பகுதியில் இருக்கின்ற மக்களுக்காக வழங்க இருக்கின்றோம். அதுமட்டுமல்லாமல் குடிநீர்வசதி, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. உங்கள் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி விட்டுதான் இங்கு வந்திருக்கிறோம். அதுபோல் சமுதாய நலக்கூடம் கட்டித்தர கோரிக்கை வைத்துள்ளீர்கள். விரைவில் அந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படும். மக்களுக்கான திட்டங்கள் இலவசம் இல்லை மக்களுக்கான முதலீடு அவர்களின் எதிர்காலத்திற்கான முதலீடு என்று. கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு ரூபாய்க்கு ஒருகிலோ அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து செயல்படுத்தினார்கள். அதுபோல ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு வீட்டிற்கும் வண்ண தொலைக்காட்சி பெட்டியை வழங்கினார்கள்.
பொதுமக்கள் யார் தயவையும் எதிர்பார்க்காமல் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு அத்தியா வசிய பொருட்களை ரேசன் கடை மூலம் வழங்கக்கூடிய நிலையை உருவாக்கிய அரசு திராவிட மாடல் அரசு. தமிழ்நாடு மாநிலம் பல்வேறு மாநிலங்களுக்கு முன்மாதிரி மாநிலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சமூகத்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் வீட்டுக்கே வந்து மருத்துவ சேவை வழங்கக்கூடிய திட்டம் தான் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வருகின்ற 15ம் தேதி மகளிர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கக் கூடிய கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்கள் என கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, கயத்தார் பேரூராட்சி மன்றத் தலைவர் சுப்புலட்சுமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பிரியா, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பேச்சியம்மாள், ஸ்ரீவள்ளி, ராஜேஸ்வரி, விஜயகுமார், பன்னீர்குளம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பொன்னுச்சாமி பாண்டியன், கயத்தார் தாசில்தார் நாகராஜன், திமுக ஓன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், மாவட்;ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் விஸ்வநாத்ராஜா, மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான அய்யாத்துரை, கயத்தார் பேரூராட்சி மன்ற உறுப்பினர் நாகராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

