தூத்துக்குடி
திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் சனாதனம் குறித்து பேசியதாக சர்ச்சை கிளம்பியது. இதனையடுத்து உத்திரபிரதேச சாமியார் பரமகன்சா ஆச்சாரியா உதயநிதி ஸ்டாலின் தலையை சீவி கொண்டு வருவதற்கு 10 கோடி நிர்ணயம் செய்திருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டணம் தெரிவித்த நிலையில் வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன் தலைமையில் பழைய பேருந்துநிலையம் அருகில் சாமியார் கொடும்பாவியை தீயிட்டு கொளுத்தினார்கள்.
இதில் மாவட்;ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பிரதீப், மகேந்திரன், ராதா கிருஷ்ணன், பாரதி, ஜோசப் அமல்ராஜ், மாநகர அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர்கள் சங்கரநாராயணன், சிவக்குமார் என்ற செல்வின், ரவி, முகம்மது ஜெயலாப்தீன், பிரவீன்குமார், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் இராஜா, வட்டச்செயலாளர்கள் கதிரேசன், பொன்ராஜ், சதீஷ்குமார், பகுதி இளைஞர் அணி அமைப்பாளா சூர்யா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

