திருநெல்வேலி, தூத்துக்குடி நாற்புற சாலையில் வல்லநாடு அருகே 1.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறிய கிராமம் நாணல்காடு. இங்கு அன்னை சிவகாமி உடனுறை திருக்கண்டீஸ்வரர் என்கிற சிவாலயம் உள்ளது. இது பாண்டிய நாட்டு பழம்பதி நெல்லையப்பருக்கு இணையான புராதன பெருமைபெற்று திகழ்கிறது. ஆலயத்தின் மேற்கே தாமிரபரணி என்னும் தட்சின கங்கை அலங்கரித்துக் கொண்டிருக்கிறாள். இந்த தீர்த்தக்கட்டம் ஆயிரம் நதிகளின் புண்ணிய சேர்க்கையுடன் (பிரவாகம் எடுத்து) பாடியதாகவும், இங்கு நீராடிவிட்டு எம்பெருமானை தரிசிப்பவர்களுக்கு பித்ருகடன் நிறைவேற்றிய பலன் கிடைப்பதாக ஐதீகம் உள்ளது. திருப்புடைமருதூரை அடுத்து இந்த இடத்தில் தான் நதி வடதென் திசையாக திரும்புகிறது. காசி ஷேத்திரத்தின் மகிமை பெற்று விளங்குகிறது.
புல்லும் (நாணல் புல்) நெல்லும் (நெல்லையம்பதி) நெழித்தோங்கிட இயற்கை சூழலில் உலகம் உய்ய தன்னையே தியாகம் செய்து கொண்ட அதாவது பாற்கடலில் தோன்றிய விஷம் அருந்தி தேவ லோகத்தையும் காத்தருளும். தியாகேசனாக அப்பன் திருக்கண்டீஸ்வரர் இங்கு வீற்றிருக்கிறார். நாணல் காடு இயற்கையின் கொடை. இந்த தர்ப்பை புல் மிகச்சிறந்த கிருமி நாசினி. இது நோய் தடுப்பாற்றல் கொண்டது. இப்படி இயற்கையான இடமான, ஆரோக்கியமான தட்பவெப்ப சூழலில் மூர்த்தம் விளங்குவது அற்புதம்.
மூர்த்தம், தலம், தீர்த்தம் மூன்றும் தல பெருமைக்கு சிறப்பு சேர்ப்பதாக உள்ளது. நல்லாட்சி ஈசனுக்குரிய சாந்நித்தியம் பெற்று கண்டீஸ்வரர் தர்ப்பாரண்யேஸ்வரராக வீற்றிருந்து நமக்கு அருள்பாலித்து கொண்டிருப்பதால் இது தென்திருநள்ளாறு எனப்படுகிறது.
சனியின் தாக்கம் பெற்றவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், கால்நடை செல்வம் வேண்டுவோர் இந்த ஆலயம் வந்து அருள்பெற்று செல்கிறார்கள். பக்தர்கள் விரும்பிய விண்ணப்பங்கள் உடனே அடைய பெறுகிறது. ஒருமுறை வந்தவர்களை ஈசன் மறுமுறை வரவழைத்துவிடுவான் வந்து பாருங்கள்.
உலகத்தார் வாழப் பாற்கடலில் தோன்றிய நஞ்சை விழுங்கிய பரமேஸ்வரன் ஸ்ரீ திருக்கண்டீஸ்வரர் என்ற பெயரைத் தாங்கிய தியாக மூர்த்தி, நமக்காக நாம் வசிக்கும் இடமாகிய திருநாணல் காட்டைத் தேடிவந்து திருக்கோவில் கொண்டுள்ளார். தென் திருநள்ளாறு என்னும் பெயர் தரித்துள்ள தர்ப்பாராண்யம் என்னும் திருநாணல்காட்டில் வீற்றிருந்து சனிதோஷம் மற்றும் நம்மை வருத்தும் தொல்லைகளிலிருந்து பாதுகாக்கிறான். எல்லா வகையான திருமணத்தடைகளையும் போக்கி, மங்கல வாழ்வு தரும் மகேசன் ஸ்ரீகண்டீஸ்வரர் அவர் எழுந்தருளியிருக்கும் இத்திருக்கோயிலுக்கு வந்து ஈசனை தரிசனம் செய்து ஸ்ரீ கண்டீஸ்வரர் அவர் எழுந்தருளியிருக்கும் இத்திருக்கோயிலுக்கு வந்து ஈசனை தரிசனம் செய்து ஸ்ரீகண்டீஸ்வரர் திருவருள் பெற்று அனைவரும் சகல பாக்கியங்களையும் பெறுவார்கள். பக்தர்கள் தங்கள் தோஷங்கள் விலக ஸ்ரீசனீஸ்வரர் சந்தானகோபாலகிருஷ்ணன் பகவானுக்கு வேண்டுதல் செய்து குரு ஹோரையில் அபிஷேகம் மற்றும் ஆராதனை பூஜைகள் செய்தால் தோஷங்கள் அகலும்.
இந்த திருக்கோவில் தூத்துக்குடி – திருநெல்வேலி பேருந்து வழிதடத்தில் வல்லநாடு என்ற ஊரில் இறங்கினால் அங்கிருந்து சுமார் 1 ½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வல்லநாட்டில் இருந்து இந்த கோவிலுக்கு அடிக்கடி ஆட்டோ வசதி உள்ளது.

அருணகிரி
நாணல்காடு

