தூத்துக்குடி
77வது சுதந்திர தினவிழாவையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். இணை ஆணையர் ராஜாராம், வரவேற்புரையாற்றினார்.
மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தேசிய கொடியேற்றி வணங்கி இனிப்புகள் வழங்கினார். பின்னர் 25வருடம் சிறப்பாக பணியாற்றியவர்கள், மற்றும் தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், பசுமையை உருவாக்கும் வகையில் மரம் நடுதல் செய்தவர்கள், மாநரகாட்சி வளர்ச்சிக்கு தனியார் பங்களிப்புடன் உதவியவர்கள் என மொத்தம் 100 பேருக்கு நற்சான்றிதழ் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். தூய்மை பணியளார்களுக்கு சீருடை வழங்கினார்.
விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, செயற்பொறியாளர் பாஸ்கர் மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், உதவி ஆணையர்கள் சேகர், தனசிங், காந்திமதி, ராமசந்திரன், நகர்நல அலுவலர் சுமதி, சுகாதார ஆய்வாளர்கள் ஹரிகணேஷ், ராஜபாண்டி, ராஜசேகர். ஸ்டாலின், கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், ராமகிருஷ்ணன், சரவணக்குமார், தெய்வேந்திரன், இசக்கிராஜா, கண்ணன், ராமர், வைதேகி, நாகேஸ்வரி, ஜெயசீலி, மரியகீதா, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், ராஜேந்திரன், விஜயகுமார், பவாணி மார்ஷல், பொன்னப்பன், ராஜதுரை, முத்துவேல், பேபி ஏஞ்சலின், மெட்டில்டா, அதிஷ்டமணி, ரெங்கசாமி, ஜான்சிராணி, ஜாக்குலின்ஜெயா, ரிக்டா, ராமுத்தம்மாள், ஜான், காந்திமணி, மந்திரமூர்த்தி, பாப்பாத்தி, சுயம்பு, பட்சிராஜ், கற்பககனி, சந்திரபோஸ், விஜயலட்சுமி, கந்தசாமி, ரெக்ஸின், சுரேஷ்குமார், மும்தாஜ், சுப்புலட்சுமி, தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் அருசுவை உணவு வழங்கப்பட்டது. திட்ட பொறியாளர் ரங்கநாதன் நன்றியுரையாற்றினார்.
இதேபோல் மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்களிலும் மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி ஆகியோர் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்கள்.

