தலைமைச்செயலக காலனி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்காக ஆய்வாளர் இராஜேஷ்வரி அவர்களால் ஆயத்தப் படுத்தப்பட்ட கொரானா தடுப்பூசி போடும் நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல இணை கமிஷ்னர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார் அவர்கள் முன்னிலையில் தலைமைச்செயலக காலனி ஆய்வாளர் இராஜேஸ்வரி அவர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தேவிகா மற்றும் உதவி ஆய்வாளர் மீனா மற்றும் காவலர்கள் உட்பட 13 பேர் நல்ல முறையில் விருப்பத்தோடு கொரானா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார்கள். இன்று மதியம் 12:15 மணிக்கு நிகழ்ச்சி முடிந்து காவலர்களுக்கு இணை கமிஷ்னர் அறிவுரைகள் வழங்கினார்