தூத்துக்குடி ஜூலை, 27
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில்
மாதார்ந்த மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்
தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், மாநகர துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், மன்ற உறுப்பினர்களுக்கு மாதார்ந்த மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை பெய்யாத நிலையிலும், மாநராட்சியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். மாநகரில் சாலைப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது என்றார். இதனைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் அதிமுக கொறடா மந்திரமூர்த்தி பேசும்போது, “காய்கறிகள் விலை ஏற்றத்தை தவிர்க்க மாநகராட்சி சார்பில் பசுமை பண்ணை அங்காடியை மீண்டும் திறக்க வேண்டும் என தெரிவித்தார். திமுக கவுன்சிலர் ரெக்ஸ்லின் பேசும்போது, “பனிமய மாதா தங்கத் தேர் திருவிழாவை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளுக்காக மேயருக்கும், ஆணையருக்கும் நன்றி தெரிவித்தார். கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனர். கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாநகராட்சி மாநகராட்சி வரி மேல்முறையீட்டு
குழு உறுப்பினர்களாக தேர்வு ஏற்பட்ட மாமன்ற உறுப்பினர்களுக்கு மாநகராட்சி மேயர், ஜெகன் பெரியசாமி, மற்றும் துணை மேயர் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

