தூத்துக்குடி, ஜூலை, 27
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் வரி மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி வரி மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் தேர்தலை நடத்தினார். இதில் மொத்தமுள்ள 60 உறுப்பினர்களில் 48பேர் வாக்களித்தனர். அதிமுகவில் 6பேர், திமுகவில் 6பேர் என 12பேர் தேர்தலில் வாக்களிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து வரி மேல் முறையீட்டு குழு உறுப்பினர்களாக 9பேர் நியமனம் செய்யப்பட்டனர்.
அதன்படி நாகேஸ்வரி (4வது வார்டு), அந்தோணிபிரகாஷ் மார்சிலின் (5வது வார்டு), தெய்வேந்திரன் (12வது வார்டு), ஜாக்குலின் ஜெயா (13வது வார்டு) இசக்கி ராஜா (15வது வார்டு) ஸ்ரீநிவாசன் (18வது வார்டு) மகேஸ்வரி (22வது வார்டு) ரெக்ஸிலின் (47வது வார்டு) சுயம்பு (56வது வார்டு) ஆகியோர் வரி மேல் முறையீட்டு குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

