தூத்துக்குடி, ஜூலை,24
மணிப்பூர் கலவரம் மற்றும் பழங்குடியினப் பெண்களுக்கு எதிரான கொடூரத்தைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு
வந்தனர்.
தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது பேசிய அவர், இது கிறிஸ்துவர்களுக்கு எதிரான மதக் கலவரம் என்றும், கலவரத்திற்கு காரணமான
பா.ஜ.க. அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றும் பேசினார். தொடர்ந்து,
பா.ஜ.க.வுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். மாநில மகளிரணி பிரச்சார குழுச்செயலாளர் ஜெஸி பொன்ராணி, வடக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சாரதா, வடக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ராமலெட்சுமி, தெற்கு மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கியமேரி, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, துணை மேயர் ஜெனிட்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில திமுக அமைப்புச் செயலாளர் வக்கீல் ஆர் எஸ். பாரதி துவக்கி வைத்து பேசுகையில் “திமுக கட்சியின் பெருமையை மோடிக்கு இரண்டே நாளில் புரிய வைத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 90 நாட்களாக மணிப்பூரில் நடக்கும் சம்பவம் கொடுமை எதைப்பற்றியும் சிந்திக்காமல் இருந்தவர் மோடி. ஒவ்வொரு தாண்டவத்தையும் பார்க்கும் போது கொடூரமாக உள்ளது. அங்குள்ள மலைஜாதி மக்கள் குக்கி சமுதாயம் உரிமைகளை கேட்டு போராடிய பெண்களை கொடூமை படுத்தி கேவலமாக நிர்வாணத்துடன் தம்பி தந்தை கணவர் முன் கற்பழித்துள்ளனர்.
இதை கண்டுக்கொள்ளாத மோடிக்கு தமிழகத்தில் உள்ள திமுக போராட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 28 ஆண்டுகளாக ரானுவத்தில் பணியாற்றிய ஓருவர் கூறுகையில் இந்திய நாட்டை பாதுகாப்பதற்காக கார்க்கில் போரின்போது உயிரை துச்சமென மதித்து பணியாற்றினேன். ஆனால் என் கண்முன்னே என் மனைவியை கற்பழித்த போது காப்பாற்ற முடியாமல் துடித்தேன். இப்படி மதவெறி கொண்ட மணிப்பூர் ஆட்சியில் கிறிஸ்தவ ஆலயம மற்றும் அதனை சார்ந்தவர்கள் குறிவைத்து தாக்குகின்றனர். 2024ல் நடைபெறவுள்ள தேர்தலின் போது மோடி ஆட்சியை ஒழித்தே தீர வேண்டும் என்று அனைவரும் சூளுரை ஏற்க வேண்டும் என்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய குழு தலைவர்கள் வசுமதி அம்பாசங்கர், கஸ்தூரி, கோமதி, வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் தங்கம், துணைத் தலைவர் மகாலட்சுமி, துணை அமைப்பாளர்கள் பெருமாள் அம்மாள், எப்சினா மேரி, விஜயலட்சுமி, பார்வதி, தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் கோகிலா, அங்காள ஈஸ்வரி, மாநகர மகளிர் அணி தலைவர் ஜான்சிராணி, துணைத் தலைவர் பாப்பாத்தி, அமைப்பாளர் ஜெயக்கனி, துணை அமைப்பாளர்கள் நாராயணவடிவு, கலாவதி, ரெஜினா, விஜயலட்சுமி, தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்கள் மண்டலத்தலைவர் கலைச் செல்வி, கவுன்சிலர் பவாணி மார்ஷல், மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர்கள் தமிழ்செல்வி, ஜெயந்தி, மலையரசி, கஸ்தூரி, தகவல் தொழில்நுட்ப அணி கருமாரியம்மாள், இந்துமதி, மாநகர தலைவர் சோபனாவாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

