தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன்சங்கம் சார்பில் தொழில்கடன் வழங்கும் நிகழ்ச்சிக்கு கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார்.
மாப்;பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன்சங்க தலைவர் சரவணக்குமார் மாப்பிள்ளையூரணி பகுதி வியாபாரிகள் 12 பேருக்கு தலா 1லட்சம் தொழில்கடன், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 9லட்சம் ஆக மொத்தம் 21லட்சம் கடன் வழங்கி பேசுகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் படி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி இந்த தொழில்கடன் வழங்கப்படுகிறது.
கூட்டுறவே நாட்டுயர்வு என்ற கோட்பாடிற்;கிணங்க இந்தியா உள்ளிட்ட தமிழக வளர்ச்சியில் முதுகெலும்பாக விளங்கக்கூடிய கிராமப்புற பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு விவசாயம் பாதுகாக்கப்படுகிறது. அதே போல் சிறுகுறு நடுத்தர வியாபாரிகளுக்கு தொழில்கடன் வழங்கி அவர்களது வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு தமிழக அரசு இதுபோன்ற கடன்களை வழங்கி ஊக்குவிக்கிறது. தொழில் புரிவோர் நல்ல முறையில் வங்கியில் வாங்கிய கடன் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் முறையாக செலுத்தி அடுத்த முறை கூடுதலாக கடன்தொகை பெற்றுக்கொள்வதற்கான வழிவகையை கையாள வேண்டும். எல்லோருடைய தொழிலும் நல்ல முறையில் நடைபெற வேண்டும். என்று பேசினார்.
நிகழ்ச்சியில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, மற்றும் கௌதம், வங்கி ஊழியர்கள் வியாபாரிகள் மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

