தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் அமைந்திருக்கும் தாளமுத்து நகர் கீழ் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவில் திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் கோவில் விழாவிற்காக வண்ண விளக்குகள், டவர், அமைக்கவும் மற்றும் இசை கச்சேரி போன்றவற்றிக்கு தாளமுத்து நகர் காவல் நிலைய அதிகாரி அனுமதி மறுத்துள்ளாராம். இந்நிலையில் அந்த கோவிலின் வரிதார்கள், பொதுமக்கள், இளைஞர்கள், ஒன்று திரண்டு தாளமுத்துநகர் காவல் நிலையத்தை
நேற்று 20 ம் தேதி இரவு 10.00 மணிக்கு முற்றுகையி ட்டுள்ளனர். கோவில் நிகழ்ச்சியில்
டவர் அமைக்கவும் இசைக்கச்சேரி நடத்தவும் ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்
மற்ற சில கோவில்களுக்கு அனுமதி வழங்கும் நீங்கள்

ஒரு சில கோவில் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பதும் ஏன்? எதற்காக இந்த பாகுபாடு காட்டுகிறீர்கள என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.சுமார்
400க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் என பெருந்திரளான கூட்டம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அதனால் தாளமுத்து நகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த வாரம் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு இளைஞர்கள் சார்பில் தாளமுத்து நகர் டேவிஸ் புரம் பகுதியில் மாட்டுவண்டி போட்டி நடத்தி பரிசு வழங்க தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் அனுமதி கேட்டுள்ளனர் . இந்த விஷயத்திலும் விளையாட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்காமல்
காலை நடைபெறும் நிகழ்ச்சிக்கு முந்தைய தினம் இரவு 9 மணி வரை அனுமதி வழங்கவில்லை யாம். அதன் பிறகு மாட்டுவண்டி போட்டி நடத்தும் விழா குழுவினர் ஒரு முன்னாள் முதல்வர் அவர் பிறந்த தினத்தை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி நடத்த ஏன் அனுமதி வழங்க மாட்டீர்கள் என்று கேட்டதற்கு அதற்கு முறையான பதில் தாள முத்துநகர் போலீசாரிடமிருந்து வரவில்லையாம் அதனால் விழா கமிட்டியினர்
அரசியல் முக்கிய பிரமுகர்கள் வரை இந்த பிரச்சனையை கொண்டு சென்று மறைந்த முதல்வர் நாடு போற்றும் தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு அமைதியான முறையில் ஒரு மணி நேரம் மட்டும் நடத்தும் மாட்டுவண்டி போட்டிக்கு கூட ஏன் அனுமதி வழங்காமல் இவ்வளவு காலதாமதம் செய்து இழுத்து அடிக்கிறார்கள்
என கேள்வி எழுப்பி உள்ளனர். அதன் பிறகு அரசியல் முக்கிய பிரமுகர்கள் தலையிட்டு இளைஞர்கள் அமைதியான முறையில் மாட்டு வண்டி போட்டி நடத்துவார்கள் என தாளமுத்து நகர் காவல் அதிகாரியிடம் பேசிய பின்பு தான் மாட்டுவண்டி போட்டி நடத்த அனுமதி கிடைக்கப்பெற்றதாம்.
இது போலவே பத்தி ரகாளியம்மன் கோவில் நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. என்று பொதுமக்கள் மத்தியில் தெரிவிக்கப்பட்டது. இரவு நேரத்தில் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட
சம்பவத்தால அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனை அறிந்த மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு வங்கி தலைவரும், திமுக ஒன்றிய செயலாளருமான சரவணக்குமார் உடனடியாக காவல் நிலையம் சென்று பொதுமக்களை முதலில் அமைதி படுத்தினார். அதன் பின்னர் பொதுமக்களின் கோரிக்கையை கேட்டறிந்து தாளமுத்து நகர் காவல் அதிகாரிகளிடம் சுமூகமாக பேசி எடுத்துரைத்துள்ளார். அதன் பிறகு பேச்சு வார்த்தை முடிவுக்கு வரப்பட்டது. அதன் பிறகு பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது மாப்பிள்ளை யூரணி பஞ்சாயத்து தலைவர் சரவண குமாருடன் கோவில் தர்மகர்த்தா ஆத்தியப்பன் என்ற செல்வம், காரியதரிசி காந்தி காமராஜ், ஆலோசகர்கள் பச்சை பெருமாள் நாடார், ஆர்.எஸ்.சுப்பிரமணிய நாடார், பால்ராஜ் நாடார், திருமணி குமார், லட்சுமணன், வார்டு உறுப்பினர் சேசு, உட்பட பலர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார்கள் மற்றும்
அப்பகுதி பொதுமக்கள் ஆகியோருக்கு மத்தியில் ஒரு நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் ஒரு நல்லுறவு கூட்டம் நடத்தி போலீஸ் பொதுமக்களுக்கு நல்லுறவை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
|
ReplyForward
|

