தமிழகத்தில் நவீன பண்பாடு என்கின்ற போர்வையில் தமிழர்களின் பண்பாடு, பாரம்பரிய நாட்டுப்புற கலைகள், பாரம்பரிய உணவுகள், பாரம்பரிய உடைகள் போன்றவை நலிவடைந்து கொண்டிருக்கிறது. இதனால் தமிழர்கள் நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் தமிழக மக்கள் நோயில்லாமல் வாழ வேண்டும் என்றால் தமிழர் பாரம்பரியம் கட்டிக் காக்கப்பட வேண்டும். அவை மேம்படுத்தப்பட வேண்டும், அடுத்த தலைமுறையினருக்கு அவற்றை எடுத்துரைக்க வேண்டும், கற்றுக் கொடுக்க வேண்டும், அப்பொழுதுதான் தமிழர்களின் பண்பாடு பாரம்பரிய நாட்டுப்புற கலைகள், பாரம்பரிய மருத்துவம், பாரம்பரிய உணவுகள் பாதுகாக்கப்படும் இல்லை என்று சொன்னால் அடுத்த தலைமுறையினர் மேற்கத்திய கலாச்சாரத்தையும் வட இந்திய கலாச்சாரத்தையும் பேணி பாதுகாப்பதில் கவனம் செலுத்துவார்கள். ஆகையால் நமது அடுத்த தலைமுறையினர் தமிழர்களின் நாட்டுப்புற கலைகள், பாரம்பரிய உணவுகள், பாரம்பரிய மருத்துவம் போன்றவை மறையாமல் இருக்க எங்களது தமிழன்டா இயக்கத்தில் உறுப்பினர்களாக சேருங்கள்.இதன் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு நாட்டுப்புற கலைகள் கற்றுக் கொடுக்கலாம். பாரம்பரிய உணவுகளை கற்றுக் கொடுக்கலாம், பாரம்பரிய மருத்துவத்தை கற்றுக் கொடுக்கலாம், வாருங்கள் ஊர் கூடி தமிழரின் பண்பாடுகளை பாதுகாப்போம். எங்களோடு இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ள படித்தவர்கள், பண்பாளர்கள், தொழில் அதிபர்கள், மாணவர்கள், பெண்கள், திருநங்கையர்கள், திரு நம்பிகள் போன்றோர் கைகோர்க்கலாம். ஒரே ஒரு முறை மட்டும் தான் இந்த உலகத்தில் வாழுகிறோம், நாம் அடுத்த தலைமுறையினருக்கு நமது பாரம்பரியத்தை கற்றுக் கொடுப்போம், வாருங்கள், வாருங்கள் அன்பொழுக வரவேற்கிறேன்.
முன்னதாக, உறுப்பினர் பதிவு மற்றும் அட்டை தயாரிப்புக்காக உங்கள் முழு முகவரி மற்றும் ‘பாஸ்போர்ட் சைஸ்’ புகைப்படத்தை நமது ‘தமிழன்டா இயக்கம்’ புலனக் குழுவுக்கோ ( வாட்ஸ் அப் குரூப் ), ஒருங்கிணைப்பாளர் எனது 9865097664 என்ற புலன எண்ணுக்கோ உடனடியாக அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.
தமிழன்டா இயக்கம், கலைக்குழு, கலைக்கூடம் என்கின்ற சிந்தனையில் இதுவரை 350க்கும் மேற்பட்ட அரசு பள்ளி கூட மாணவர்களுக்கு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு தப்பாட்டம் என்கின்ற பறையாட்டம், ஒயிலாட்டம், கட்டைக்கால் ஆட்டம் போன்ற நாட்டுப்புற கலைகள் பயிற்சிகள் வழங்கி அவர்கள் பள்ளி விழாக்களில் நிகழ்த்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.200மேற்பட்ட அரசு ,தனியார் பள்ளி மாணவர்களுக்கு நோயில்லாமல் வாழ்வது எப்படி? தலைப்பில் உடல்,உள்ளம்,மனம் சார்ந்த கருத்துக்கள் அடங்கிய உரைவீச்சு வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் பல பள்ளி மாணவர்களுக்கும் பல்வேறு பள்ளிக்கூட மாணவர்களுக்கும் இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டது.இந்த பயிற்சியின் பொழுது பல பறைகள் கிழிந்தது,என்பது குறிப்பிடத்தக்கது
*அன்புடன் தமிழன்டா இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழன்டா செ.ஜெகஜீவன்,செல் ;9791780068 தூத்துக்குடி*

