தூத்துக்குடி.
தூத்துக்குடி மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 121வது பிறந்தநாளை முன்னிட்டு வஉசி மார்க்கெட் அருகிலுள்ள காமராஜர் சிலைக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ, ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
நிகழ்ச்சிகளில் மண்டல தலைவர்கள் ராஜன், ஜசன்சில்வா, சேகர், செந்தூர்பாண்டி, தமிழ்நாடு தேசிய உப்பள சம்மேளம் மாநில செயலாளர் ஜான் பிரிட்டோ, மாநகர் மாவட்ட அமைப்பு சாரா தொழிற்சங்க தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், முன்னாள் மாவட்ட தலைவர் அருள், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் முத்துமணி, மாநகர துணை தலைவர்கள் பிரபாகரன், அருணாசலம், பிரபாகர், ஜெயராஜ், மாநகர மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா, முன்னாள் கவுன்சிலர்கள் வெங்கடசுப்பிரமணியன், சாமுவேல் ஞானதுரை, ராதாகிருஷ்ணன், கனியம்மாள், மகளிர் அணி காங்கிரஸ் தலைவிகள் ப்ரீத்தி, சாந்தி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிவன், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் மைதீன், ஒட்டப்பிடாரம் தொகுதி முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆரோக்கியம், மாவட்ட செயலாளர்கள் கோபால், ஜெயராஜ், சேகர், பொதுக்குழு உறுப்பினர் எடிசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

