நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு இலவச விற்பனை வண்டி வழங்கும் விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று தொடங்கி வைத்து, சாலையோர வியாபாரிகளுக்கு இலவச விற்பனை வண்டியினை வழங்கினார்.
நாகப்பட்டினம் ஜூலை 6
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு இலவச விற்பனை வண்டி வழங்கும் விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்து சாலையோர வியாபாரிகளுக்கு இலவச விற்பனை வண்டியினை வழங்கினார். இந்நிகழ்ச்சி நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் நாகப்பட்டினம் நகர்மன்றத் தலைவர் இரா.மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
சிறு வியாபாரிகள், வணிகர்களுக்கு மூலதனத்துக்காக கடன் உதவி வழங்குவதற்காக பிரதமர் தெரு வியாபாரிகள் ஆத்மநிர்பார் நிதி திட்டம் எனப்படும் பிரதமர் ஸ்வநிதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் இன்று பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் தலா ஒரு வண்டியின் விலை ரூ 1,06,000 மதிப்பீட்டில், 9 உணவு மற்றும் பழ விற்பனை வண்டிகளை ரூ. 9,54,000 மதிப்பீட்டில் மற்றும் ஒரு பூ விற்பனை வண்டி ரூ. 60,000 மதிப்பீட்டில் என ஆகமொத்தம் ரூ. 10,14,000 மதிப்பீட்டில் விற்பனை வண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் நாகப்பட்டினம் நகர்மன்றத் துணைதலைவர் செந்தில்குமார், நாகப்பட்டினம் சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொ) ஏ.சங்கர், வார்டு உறுப்பினர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

