• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழ்நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது கலைஞரின் திராவிட கொள்கைகள் திண்டுக்கல் லியோணி தீர்ப்பு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

policeseithitv by policeseithitv
July 1, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழ்நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது கலைஞரின் திராவிட கொள்கைகள் திண்டுக்கல் லியோணி தீர்ப்பு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பட்டிமன்றம் டூவிபுரத்தில் நடைபெற்றது.

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார்.

மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், மாநில பேச்சாளர் இருதயராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திமுக துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின் வரவேற்புரையாற்றினார்.

தமிழ்நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பது கலைஞரின் மக்கள் நல திட்டங்கள் என்ற தலைப்பில் ஆசிரியர் நாகநந்தினி, பேராசிரியர் விஜயகுமார், திராவிட கொள்கைகள் என்ற தலைப்பில் கவிஞர் இனியவன், பேராசிரியர் ராஜதுரை, ஆகியோர் பேசினார்கள்.

அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் ஜுன் 3 2023 முதல் 2024 ஜுன் 3 வரை ஒருவருடம் கலைஞரின் புகழை தமிழகம் முழுவதும் எடுத்துச்செல்ல வேண்டும். என்று முதல்வர் தளபதியார் உத்தரவிற்கிணங்க நம்முடைய மொழி தமிழகத்தின் வளர்ச்சி என எல்லா துறைகளிலும் தமிழகத்தை தலைநிமிர செய்த கலைஞரின் ஆட்சியின் சாதனைகளை நாம் எடுத்துக்கூறி வருகிறோம். 1996- 2001 திமுக ஆட்சியில் கலைஞர் கொண்டுவந்த கனிணி கல்வி மூலம் படித்து சாதனை படைத்த நம்தமிழர்கள் இன்று உலகம் முழுவதும் பணியாற்றி வருகிறார்கள். அந்த கூகுகளை சேர்ந்த சுந்தர்பிச்சை தமிழர் தான், ஒருகோடி உறுப்பினர்களை கொண்ட திமுக புதிதாக ஓரு கோடி தொண்டர்களை தளபதியார் ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. முதல்வரின் ஆட்சிக்கு ஆளுநர் இடையூறு ஒன்றிய அரசு பாராமுகம் என்று பல்வேறு சோதனைகளை கடந்து சாதனை படைத்து வருகிறார். செப்டம்பர் 15 முதல் 1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம் என்று பேசினார்.

மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் இராஜா, கஸ்தூரிதங்கம், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாவட்;ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், துணை அமைப்பாளர் ராமர், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், கவுன்சிலர்கள் பவாணி மார்ஷல், சரவணக்குமார், வைதேகி, விஜயகுமார், தெய்வேந்திரன், அந்தோணிபிரகாஷ் மார்ஷல், சுப்புலட்சுமி, நாகேஸ்வரி, கந்தசாமி, மாவட்ட பிரதிநிதிகள் சேர்மபாண்டியன், செந்தில்குமார், நாராயணன், அனல்மின்நிலைய கூட்டுறவு சங்க தலைவர் துரை, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அருண்சுந்தர், செல்வின், இலக்கிய அணி துணை அமைப்பாளர் பிக்அப்தனபால், வட்டச்செயலாளர்கள் சுப்பையா, செல்வராஜ், பாலகுருசாமி, சிங்கராஜ், கீதா செல்வமாரியப்பன், அனல்சக்திவேல், மற்றும் கருணா மணி, பெனில்டஸ், மகேஸ்வரசிங், பெல்லா, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இரு தரப்பிலும் கலைஞரின் ஆட்சியில் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை, 33 சதவீத இட ஒதுக்கீடு, என பல சாதனைகள் வழங்கிய கலைஞர் ஆட்சிக்குபின் தற்போது தளபதியார் ஆட்சியில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு பேருந்தில் இலவச பயணம், உரிமைத்தொகை வழங்கப்படவுள்ளது. 21 மேயர்களில் 11 பேர் பெண்கள் என பல சாதனைகள் தொடர்கின்றன. என்றும் ஒரு அமைப்பு கட்டமைப்பு சரியாக இருந்தால் தான் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற முடியும் கலைஞர் சந்தித்த சோதனைகள் ஏராளம் இருந்தாலும் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் பணியாற்றியதுதான் மிகப்பெரிய வரலாறு தடம் மாறாமல் தனக்கென்று வாழாமல் உலகத்திற்கே வழிகாட்டியாக திகழ்ந்து வரலாறு படைத்த சாதனைகள் திராவிட கொள்கைகள் தான் என்று பேசினார்கள்.

இறுதியில் நடுவராக பணியாற்றிய திமுக கொள்கைபரப்பு செயலாளரும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோணி பேசுகையில் தமிழக முதலமைச்சராக தளபதியார் பொறுப்பேற்ற போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று பொறுப்பேற்று யாருக்கும் அடிமையாக இருக்க மாட்டேன். கொள்கைகளை கலைஞர் வழியில் நின்று உறுதியாக நிறைவேற்றுவேன் என்பதை ஆளுநர் ரவிக்கு அப்போதே எடுத்துரைத்தார். கலைஞர் திரைப்பட துறையில் இருந்த காலத்தில் இப்போது இருக்கும் பிரதமர் மோடியின் ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டி தெரிவிக்கும் வகையில் அந்த படத்தில் குற்றம் செய்த வில்லனுக்கு மரண தண்டனை விதிக்கப்;பட்ட போது உண்ணுடைய ஆசை என்ன என்று கேட்ட போது இந்த நாடே நாசமாக போகட்டும் என்பது என்னுடைய ஆசை என்பார். அதேபோல் தான் இன்று இந்த நாட்டை வழிநடத்தி செல்லவேண்டிய பிரதமர் தவறான வழிக்கு அழைத்து செல்கிறார். மணிப்பூரில் 50 நாட்களுக்கு மேலாக நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. வெளிநாடுகளுக்கு சென்று உலா வருகிறார். தமிழகத்திற்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்த இந்தியாவின் பிரதமர் தமிழகத்திலிருந்து வருவார் என்று பேசியுள்ளார். மோடி மீது அவருக்கே நம்பிக்கை இல்லை நம்முடைய தலைவர் தளபதியார் அடையாளம் காட்டுபவர் தான் பிரதமர் என்ற நிலை உருவாகியுள்ளது. பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சி கூட்டத்திற்கு பின்னர் ஆளும் கட்சியினர் பதட்டத்தில் உள்ளனர். காரணம் தளபதியார் திட்டங்கள் கொள்கைகள் இன்று இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொண்டுவரப்பட்டது. இதன் எதிரொலி தான் ஆளும் கட்சியினருக்கு அரை கூவலாக அமைந்துள்ளது. 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் நாட்டுமக்களும் மகிழ்ச்சியில் இல்லை அவர்களும் மகிழ்;ச்சியில் இல்லை. இன்று வரை நீதிமன்றத்தில் இளுத்து கொண்டே செல்கிறது வழக்கு நம்முடைய முதல்வரின் சாதனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டு வளர்ச்சியில் கலைஞரின் பெரும் பங்கு வகித்தது திராவிட கொள்கைகள் தான் என்று தீர்ப்பு வழங்கி வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 40 நமதே நாளைய இந்தியா நமதே. என்று பேசினார்.

Previous Post

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் ஏழை எளியவர்கள் நிறைந்த பகுதி பட்டா வழங்க உதவிட வேண்டும் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கோரிக்கை

Next Post

தூத்துக்குடி மாநகராட்சி 6வது வார்டு பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Next Post
தூத்துக்குடி மாநகராட்சி 6வது வார்டு பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி 6வது வார்டு பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In