• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

யோகா பயிற்சியில் 5 முறை உலக சாதனை பெற்ற கோவில்பட்டி மாணவிக்கு அமைச்சர் கீதாஜீவன் பாராட்டு!”

policeseithitv by policeseithitv
June 18, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
யோகா பயிற்சியில் 5 முறை உலக சாதனை பெற்ற கோவில்பட்டி மாணவிக்கு அமைச்சர் கீதாஜீவன் பாராட்டு!”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி,

ஜூன்,18

உலகளவில் எல்லா தரப்பினரும் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பதில் முக்கிய பயிற்சியான யோகா பயிற்சியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினசரி முழுமையாக தனது உடலை அசைவுகளின் மூலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு கடைபிடித்து வருகின்றன.

இந்நிலையில் விஜயன் ரம்யா ஆகியோரது மகள் ரவீணா (9) கோவில்பட்டி எடுஸ்டர் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறார். ரவீணா தன் நான்கு வயது முதல் யோகா பயின்று வருகிறார்; தான் கற்ற யோகாவை வைத்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியுள்ளார். கொரோனா காலத்தில் யோகாவின் அவசியத்தை மக்களுக்கு எடுத்து உரைத்தும் செய்து காட்டியும் விழிப்புணர்வு நடத்தியுள்ளார். தன் 6 வயது முதல் ஸ்கேட்டிங் பயின்று வருகிறார். அதிலும் உலக சாதனை படைத்து உள்ளார். இதுவரை அவர் கண்ணாடி கிளாஸ், தீப அகல் விளக்கு, செங்கல், 3 அடுக்கு மண் பானை போன்றவற்றில் ஆசனங்கள் செய்துள்ளார். ஸ்கேட்டிங்கில் ஜிக்சக் (பாம்பு வடிவம்) செய்து உலக சாதனை செய்துள்ளார். மக்கள் அனைவரும் மஞ்சள் பை தான் பயன்படுத்த வேண்டும் என்று ஸ்கேட்டிங் மூலம் சென்று விழிப்புணர்வு செய்தார். பிளாஸ்டிக் பை ஒழிப்போம் மஞ்சள் பை யை கையில் எடுப்போம் என்பதை வலியுறுத்தினர். இதுவரை அவர் 5 உலக சாதனைகள் மற்றும் 8 விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியுள்ளார். மற்றும் ஓரு புது முயற்சியாக திருக்குறளையும் யோகவையும் இணைத்து நிகழ்ச்சி நடத்தயுள்ளார். அதாவது 133 அதிகாரத்துக்கு 133 ஆசனங்கள் செய்து புது உலக சாதனை முயற்சி செய்துள்ளார். மற்றும் சிறார் வன்கொடுமை விழிப்புணர்வு நடத்தினார்.

இந்நிலையில் எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்பு 133 ஆசனங்களை ரவீணா செய்துகாண்பித்தார். மாணவி அமைச்சருக்கு கலைஞர் சிலையை கொடுத்தார். பதிலுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி, உலகநாதன், அல்பட், யோகா மாநில தலைவர் அசோக்குமார், யோகா பயிற்சியாளர் கோவில்பட்டி சுரேஷ்குமார், உள்பட பலர் உடனிருந்தனர்.

வரும் 21ம் தேதி உலக யோகாதினத்தை முன்னிட்டு சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள யோகா நிகழ்ச்சியில் இம்மாணவி கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . பல்வேறு மாணவ மாணவிகளை உலக சாதனை புரிய சிறந்த பயிற்சி அளித்து வரும் யோகா பயிற்சியாளர் கோவில்பட்டி சுரேஷ்குமார், அவர்களை அமைச்சர் கீதா ஜீவன் பாராட்டினார்.

 

செய்தி தொகுப்பு

எம் கண்ணன்

போலீஸ் செய்தி நியூஸ் சேனல்

Previous Post

மாப்பிள்ளையூரணியில் இலவச கண்சிகிச்சை முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

Next Post

தூத்துக்குடியில் கோல்டன் பீஜியன் ஸ்போர்ட்ஸ் சொசைட்டி சார்பில் பரிசளிப்பு விழா: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டி  யன் பங்கேற்று பரிசுகள் வழங்கினார்..

Next Post
தூத்துக்குடியில்  கோல்டன் பீஜியன் ஸ்போர்ட்ஸ் சொசைட்டி சார்பில் பரிசளிப்பு விழா:  முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டி   யன் பங்கேற்று பரிசுகள் வழங்கினார்..

தூத்துக்குடியில் கோல்டன் பீஜியன் ஸ்போர்ட்ஸ் சொசைட்டி சார்பில் பரிசளிப்பு விழா: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டி  யன் பங்கேற்று பரிசுகள் வழங்கினார்..

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In