தூத்துக்குடி
மாற்றுக்கட்சியினர் 50 பேர் கனிமொழி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். வடக்கு மாவட்ட திமுக விவசாய அணி தலைவரும் கயத்தாறு 3வது வார்டு பேரூராட்சி உறுப்பினருமான மோகன் ஏற்பாட்டின் படி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வைத்து திருமங்கலகுறிச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஊராட்சி செயலாளர் செல்லத்துரை அதிமுகவை சேர்ந்த வெயிலுமுத்து, ராஜா, முருகன், மைக்கேல் சில்வர்ஸ்டர், அந்தோணிராஜ், முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த கார்த்தீஸ்வரன், பிஜேபியை சேர்ந்த சதஷ்குமார், மற்றும் உள்ளாட்சி தேர்தலையொட்டி திமுகவிலிருந்து நீக்கப்பட்டிருந்த கயத்தாறு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தலைவர் கோதாண்டராமன், கயத்தாறு பேரூராட்;சி 1வது வார்டு உறுப்பினர் கொம்மையா உள்பட 50 பேர் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். மாற்றுகட்சியிலிருந்து திமுகவில் இணைந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து கட்சிப்பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மார்க்கன்டேயன் எம்.எல்;.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன். வாண்டாளம் ஊராட்சி தலைவரும் கூட்டுறவு சங்க தலைவருமான பொன்னுச்சாமி, இளைஞர் அணி மதார்மைதீன், மற்றும் கருணா, மணி, அல்பட், செந்தில்குமார், ரவி, உள்பட பலர் உடனிருந்தனர்.

