தூத்துக்குடி,மே,3
தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயங்கி வரும் 68 டாஸ்மாக் மதுபான கூடங்களை அகற்ற கோரி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது இந்த மனு மீது தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கா விட்டால் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகை இடப் போவதாக பாஜகவினர் அதிரடியாக தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் இயங்கி வரும் மதுபான கூடங்களின் எண்ணிக்கை குறித்து டாஸ்மாக்
மேலாளரிடம் கேட்டிருந்தார்.. இதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 142 அரசு மதுபான கடைகளில் 74 கடைகளுக்கு மட்டுமே பார் உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் மீதி உள்ள 68 கடைகள் பார் இல்லாத கடைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த 68 கடைகளும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவுடன் நடைபெற்று வருவதாக தெரிகிறது. எனவும்
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சித்ராங்கன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜிடம் மனு அளித்தனர்..
இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 142 அரசு மதுபான கடைகளில் அனுமதி இல்லாமல் இயங்கி வரும் 68 மதுபான கூடங்களை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பள்ளி கல்லூரிகள் அருகே உள்ள அரசு மதுபான கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும்
வரும் 15 தினங்களுக்குள் மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கா விட்டால் சிப்காட்டில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக பாரதிய ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளனர். இந்த பேட்டியின் போது
சித்ராங்கதன் மாவட்ட தலைவர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மற்றும் சத்தியசீலன், திரைப்பட நடிகர் காசி( எ ) காசிலிங்கம் உட்பட பாஜகவினர் ஏராளமானோர் உடன் இருந்தனர்
செய்தி தொகுப்பு
சக்திவேல்
போலீஸ் செய்தி நியூஸ் சேனல்

