தூத்துக்குடி
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 100வது பிறந்தநாளையொட்டி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். மாணவர்கள் இளைஞர்கள் இளம் பெண்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். என்று அறிவுரை வழங்கி இருந்தார்.
அதன்படி வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட விளாத்திகுளம், கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் ஒன்றிய நகர பேரூர் செயலாளர்களுக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து தூத்துக்குடி மாநகர திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமார் என்ற செல்வின், 19வது வார்டுக்குட்பட்ட பகுதியில் புதிதாக 1375 உறுப்பினர்களை சேர்த்துள்ளார். அதன் படிவத்தை எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவனிடம் வழங்கினார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், வட்டப்பிரதிநிதி பாஸ்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.

