தூத்துக்குடி
அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்ககட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி 69 வது பிறந்த நாளை யொட்டி சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் நினைவு பரிசு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் ஆறுமுகநயினார், தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளரும் கவுன்சிலருமான வக்கீல் வீரபாகு, வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச்செயலாளர் ஜீவாபாண்டியன், தலைமை பேச்சாளர் கருணாநிதி, முன்னாள் அரசு வக்கீல் கோமதி மணிகண்டன், வடக்கு மாவட்;ட தகவல் தொழில்நுட்ப அணி கௌதம் பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், வட்டச்செயலாளர்கள் ராஜா, துரைசிங், மற்றும் காசி, மணி, உள்பட பலர் உடனிருந்தனர்.

