தூத்துக்குடி
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வெளியானது. அதில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 12ம் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மாணவி திண்டுக்கல் நந்தினிக்கு பாராட்டு வாழ்த்துக்களை பலர் தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சருமான தூத்துக்குடி சி த செல்லப்பாண்டியன் திண்டுக்கலில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மாணவி நந்தினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கினார்.
மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் வீரபாகு, முன்னாள் அரசு வக்கீல் கோமதி மணிகண்டன், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச்செயலாளர் ஜீவாபாண்டியன், தலைமை பேச்சாளர் கருணாநிதி, முன்னாள் அரசு வக்கீல் கோமதி மணிகண்டன், வடக்கு மாவட்;ட தகவல் தொழில்நுட்ப அணி கௌதம் பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், வட்டச்செயலாளர்கள் ராஜா, துரைசிங், மற்றும் காசி, மணி, உள்பட பலர் உடனிருந்தனர்.

