தூத்துக்குடி கதிரேசன் கோயில் தெரு, ராஜமன்னார் தெருவில் நடைபெற்று வரும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடக்கும் பல்வேறு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது அப்பகுதி பொதுமக்கள் வியாபாரிகள் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள பெரிய அளவிலான பள்ளத்தால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறினர். இதனை உடனடியாக மூடி சீர் செய்ய அதிகாரிகளுக்கு ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டார்.
மாநகராட்சிகுட்பட்ட அண்ணாநகர், இரண்டாம் கேட் பகுதியில் உள்ள சந்திப்புகளில் சிமெண்ட சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளையும் நான்காம் கேட்டில் இருந்து விவிடி சிக்னல் செல்லும் பாதையில் உள்ள பாலம் அகலப்படுத்தும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவாக பணிகளை முடிக்கும் வகையில் விரைந்து பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டார்.
மேலும் மாநகராட்சி வெற்றிவேல்புரத்தில் இருந்து கடற்கரை செல்லும் சாலை வரை போடப்படுகிறது. சாலை பணிகள் துவங்க உள்ளதையும் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மண்டல தலைவர் நிர்மல்ராஜ், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், வட்டச் செயலாளர் கருப்பசாமி, மாவட்ட சிறுபான்மைபிரிவு துணை அமைப்பாளர் அந்தோணி, மாநகராட்சி அதிகாரிகள், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், திமுக பிரதிநிதிகள் பிரபாகரன், ஜோஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

