தூத்துக்குடி
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதி நூற்றாண்டு விழா திமுக பவள விழா இதனை யொட்டி புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டதையடுத்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழிகாட்டுதலின் படி மாநகர திமுக இளைஞர் அணி அமைப்பாளர் வக்கீல் ஆனந்த கபரியேல்ராஜ், தலைமையில் போல்டன்புரம் பகுதியில் இல்லம் தோறும் சென்று உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் தமிழ்வாணன், தகவல் தொழில்நுட்ப அணி அண்ணாதுரை, வட்டச்செயலாளர் செல்வராஜ், நிர்வாகிகள் முருகன் என்ற சுக்கு, பார்த்திபன், தமிழ்செல்வன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

