தூத்துக்குடி
தமிழக அரசின் சார்பில் புத்தக திருவிழா தூத்துக்குடியில் நடைபெற்றது. இதனையொட்டி பேரூரணி சிறையில் உள்ள நூலக பயண்பாட்டிற்காக தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி சார்பில் சிறை கண்காணிப்பாளர் ரவியிடம் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், பல்வேறு அறிவுசார்ந்த புத்தகங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியை கூட்டுறவு சரக துணைப்பதிவாளர் ரவீந்திரன், பொதுமேலாளர் பிரேம்குமார், இயக்குநர் பாலசுப்பிரமணியன், மேலாளர் எபனேசர், சிறை துறைசார்ந்த உதவி கண்காணிப்பாளர் பெருமாள், வெள்ளத்துரை, தலைமை வார்டன்கள் தொட்டியன், ஆனந்த், இரண்டாம் நிலை காவலர்கள் ராம்குமார், ஏசு தேவராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

