திருநெல்வேலி
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 234 சட்டமன்ற தொகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமித்து பாகம் முகவர்கள் முறைப்படுத்தி முறையாக தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி மத்திய மாவட்டம், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி பாகம் முகவர்கள் அடங்கிய பட்டியலை முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுபடி அண்ணா அறிவாலயத்தில் கழக அமைப்பு துணைச் செயலாளர் அன்பகம் கலையிடம் மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் ஒப்படைத்தார். திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் உடனிருந்தார்.

பின்னர் வசந்தம் ஜெயக்குமார் கூறுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதியார் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு என்னை பொறுப்பாளராக நியமித்து என் மீது நம்பிக்கை வைத்து ஒப்படைத்த பணியை முழுமையாக செய்வதற்கு இந்த பணியை முடிக்க எனக்கு முழுமையாக துணை நின்ற மாவட்ட கழக செயலாளர், மாநாகர செயலாளர், மாவட்ட கழக துணை செயலாளர்கள், தலைமை கழக பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை கழக செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் மாவட்ட கழக, ஒன்றிய கழக, பகுதி கழக, வட்ட கழக, அனைத்து கழக அணி நிர்வாகிகள், மற்றும் ஏனைய கழக உடன்பிறப்புகள் அத்தணை பேருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த பணிவாண வணக்கதுடன் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.

