தூத்துக்குடி மாநகரம் பிரையன்ட் நகர் 12வது தெரு கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய சாலைப் பணிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் புதிதாக சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டதுடன்,
அந்த பகுதியில் செய்து கொடுக்க வேண்டிய வடிகால் வசதிகள் குறித்து அப்பகுதியை சார்ந்த பொதுமக்களிடம் கேட்டறிந்தார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் ராமகிருஷ்ணன், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, கவுன்சிலர் சரவணக்குமார், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மற்றும் மணி கருணா, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

